ட்விட்டரில் கால் பதித்த 'CHIYAAN' விக்ரம்.. ரஞ்சித் பட லுக்கில் முதல் 'VIDEO'.. அவரோட COVER PIC தான் ஹைலைட்டே

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கோலிவுட் திரை உலகில், பிரபலமான நடிகர்களில் ஒருவர் சியான் விக்ரம். ஒவ்வொரு படத்திலும், வித்தியாசமான நடிப்பு மற்றும் கதாபாத்திரம் என தேர்ந்தெடுத்து நடித்து வருவதையே தனது சிறப்பம்சமாக அவர் கொண்டுள்ளார்.

Advertising
>
Advertising

இவரது நடிப்பில் அடுத்ததாக 'கோப்ரா' திரைப்படம், வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி அன்று வெளியாக உள்ளது. டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கி உள்ளார்.

இதனைத் தொடர்ந்து, மணிரத்னம் இயக்கத்தில், ஜெயம் ரவி, கார்த்தி உள்ளிட்ட பலருடன் சியான் விக்ரம் நடித்துள்ள திரைப்படம் 'பொன்னியின் செல்வன்'. புகழ்பெற்ற மறைந்த எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் "பொன்னியின் செல்வன்" நாவலை அடிப்படையாக கொண்டு இரண்டு பாகங்களாக அதே பெயரில், திரைப்படத்தையும் மணிரத்னம் இயக்குகிறார்.

பொன்னியின் செல்வன் முதல் பாகம், செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், இதன் டீசர் மற்றும் சிங்கிள் உள்ளிட்டவை மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து, இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்திலும் புதிய திரைப்படம் ஒன்றில் விக்ரம் நடிக்க உள்ளார்.

இந்நிலையில், புதிய ட்விட்டர் கணக்கு ஒன்றை நடிகர் விக்ரம் தற்போது தொடங்கி உள்ளார். அத்துடன் புதிய வீடியோ ஒன்றையும் தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார். தொடர்ந்து அந்த வீடியோவில் பேசும் விக்ரம், "எல்லாருக்கும் வணக்கம். நான் தான் சியான் விக்ரம். நெஜமாவே நான் தான். மாறுவேஷத்துல இல்ல. ரஞ்சித் படத்திற்காக நான் தயாராகி கொண்டிருக்கிறேன். இது போல நிறைய விஷயங்கள் இருந்தால், ட்விட்டரில் ரசிகர்களிடம் தெரிவிக்கலாம் என பலரும் சொன்னார்கள்.

நான் தாமதமாக வந்ததாகவே உணர்கிறேன். இந்த உலகத்தில் அவ்வளவு அன்பு நமக்காக காத்திருப்பதாக அனைவரும் பேசுவதை நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அதை நாமும் சற்று அனுபவிக்கலாம் என்று தான் ட்விட்டர் தளத்தில் வந்துள்ளேன்" என குறிப்பிட்டுள்ளார்.

 

இதன் காரணமாக, விக்ரமின் திரைப்படம் குறித்த அப்டேட்களை அவரே அடிக்கடி வெளியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல, தனது புகைப்படத்தை ட்விட்டரில் வைத்துள்ள விக்ரம், கவர் பிக்சராக பொன்னியின் செல்வன் படத்தின் போஸ்டர் ஒன்றையும் வைத்துள்ளார். விக்ரம் ட்விட்டரில் சேர்ந்துள்ளது, ரசிகர்கள் அனைவரையும் உற்சாகம் அடைய வைத்துள்ளது.

தொடர்புடைய இணைப்புகள்

Chiyaan vikram joins twitter upload video for fans

People looking for online information on Chiyaan Vikram, Cobra, Pa Ranjith, Ponniyin Selvan, Twitter, Vikram will find this news story useful.