கோப்ரா படத்தின் நீளம் குறைக்கப்பட்டுள்ளது என படத்தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
Also Read | 'விடுதலை' படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை கைப்பற்றிய பிரபல நடிகர் & தயாரிப்பாளர்.. போடு வெடிய
விக்ரம் நடிப்பில் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நேற்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோப்ரா திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.
தமிழகம் முழுவதும் முக்கிய நகரங்களில் முதல் நாள் முதல் காட்சி காலை 5 மணிக்கு திரையிடப்பட்டது. மற்ற இடங்களில் காலை 7 மணிக்கு முதல் காட்சி திரையிடப்பட்டது.
இந்தப் படத்தை லலித் குமார் தயாரிக்க, இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
இந்த படம் சென்னை நகரில் 21 திரையரங்குகளிலும், செங்கல்பட்டு ஏரியாவில் 87 திரையரங்குகளிலும், கோப்ரா படம் வெளியாகி உள்ளது. திருச்சி தஞ்சாவூர் ஏரியாவில் 42 திரையரங்குகளிலும், மதுரை ஏரியாவில் 69 திரையரங்குகளிலும், திருநெல்வேலி ஏரியாவில் 31 திரையரங்குகளிலும், சேலம் ஏரியாவில் 51 திரையரங்குகளிலும், கோயம்புத்தூர் ஏரியாவில் 89 திரையரங்குகளிலும், தென் ஆற்காடு ஏரியா & வட ஆற்காடு ஏரியா முறையே 52 & 46 திரையரங்குகளில் கோப்ரா படம் வெளியாகி உள்ளது. ஒட்டுமொத்தமாக தமிழகம் முழுவதும் 488 திரையரங்குகளில் கோப்ரா படம் வெளியாகி உள்ளது.
இந்த கோப்ரா படம் இந்திய அரசின் சென்சார் போர்டு மூலம் சென்சார் செய்யப்பட்டது. இந்த படத்திற்கு CBFC, U/A சான்றிதழ் வழங்கியது. மேலும் இந்த படம் 3 மணி நேரம் 3 நிமிடங்கள் 3 வினாடிகள் ஓடும் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் படத்தின் நீளத்தை குறைப்பதாக படத்தயாரிப்பு நிறுவனம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், "எந்தவொரு திரைப்படமும் பார்வையாளர்களை உற்சாகப்படுத்தவும், சினிமா அனுபவத்தை ரசிக்க வைப்பதற்காகவும் குறிப்பாக வடிவமைக்கப்பட்ட பொழுதுபோக்கு வடிவமாகும்.
பார்வையாளர்களின் நேரத்திற்கும் டிக்கெட் பணத்திற்கும் மதிப்புள்ள உள்ளடக்கம் வழங்கப்பட்டால், குழுவிற்கு மிகுந்த மகிழ்ச்சி.
நாங்கள் உங்களுக்கு செவி சாய்த்தோம்!
திரைப்பட பார்வையாளர்கள் பரிந்துரைத்தபடி கோப்ரா இப்போது 20 நிமிடங்கள் டிரிம் செய்யப்பட்டுள்ளது. எங்கள் ஊடக நண்பர்கள், ரசிகர்கள், விநியோகஸ்தர்கள் & பார்வையாளர்கள் கருத்துப்படி.
இப்போது, தெலுங்கானா கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு & ஆந்திரப் பிரதேசம் முழுவதிலும் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் இன்று மாலையில் இருந்து கோப்ரா படத்தின் டிரிம் செய்யப்பட்ட பதிப்பைப் பாருங்கள்.
திரையரங்குகளில் கோப்ரா படத்தை பார்த்து ஆதரவளிக்கவும்" என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த கோப்ரா படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக KGF புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். இவர்களுடன் இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார், குஜராத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான், மியா ஜார்ஜ், கனிகா, மிருணாளினி, ஜான் விஜய் ஆகியோர் நடித்துள்ளனர்.
Also Read | எல்லாரும் நல்லா இருக்கனும்..பிள்ளையார்பட்டி கோயிலில் சாமி தரிசனம் செய்த சிம்பு!