விக்ரம் - பா. ரஞ்சித் இணையும் புதிய படம்.. படப்பூஜைக்கு யாரெல்லாம் வந்திருக்காங்கனு பாருங்க!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பா. ரஞ்சித் - விக்ரம் இணையும் புதிய படத்தின் பூஜை சென்னயில் நடந்தது.

Chiyaan 61 Vikram Pa Ranjith Movie Poojai at NDFC
Advertising
>
Advertising

பா. ரஞ்சித், நடிகர் விக்ரம் நடிப்பில் சியான்61 என்ற படத்தை இயக்க உள்ளார். இதற்கான அறிவிப்பு கடந்தாண்டு டிசம்பரில் வெளியானது. ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் இந்த படம் உருவாக உள்ளது.

Chiyaan 61 Vikram Pa Ranjith Movie Poojai at NDFC

இந்த படத்திற்கு 'மைதானம்' என பெயரிடப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.  இந்த படத்திற்கு இசையமைப்பாளராக ஜி.வி. பிரகாஷ் ஒப்பந்தமாகியுள்ளதாக நம்பந்தகுந்த தகவல்கள் கூறுகின்றன.  இப்படம் ஸ்டூடியோ கிரீனின் 23வது தயாரிப்பு ஆகும்.

Chiyaan 61 Vikram Pa Ranjith Movie Poojai at NDFC

இந்த படத்தின் பூஜை இன்று (ஆனி மாதம் கடைசி நாள் 32) (16.07.2022) அடையாறில் உள்ள National Film Development Corporation of India ல் உள்ள தாகூர் பிலிம் செண்டரில் நடைபெற்றுள்ளது. இந்த பூஜையில் நடிகர் விக்ர்ம், இயக்குனர் பா.ரஞ்சித், இசையமைப்பாளர் GV பிரகாஷ், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, நடிகர் சிவக்குமார், நடன இயக்குனர் சாண்டி, நடிகர் கலையரசன், ஒளிப்பதிவாளர் கிஷோர் குமார், நடிகர் ஆர்யா கலந்து கொண்டனர்.

சில நாட்களுக்கு முன் இப்படம் குறித்து தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பிரத்யேகமாக பிகைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் இந்த படம் 18 ஆம் நூற்றாண்டு பின்னணியில் உருவாக உள்ளதாகவும், 3D தொழில்நுட்பத்தில் எடுக்கப்பட உள்ளதாகவும் கூறியுள்ளார். பான் இந்திய படமாக பெரும் பொருட் செலவில் உருவாக உள்ளது என ஞானவேல் ராஜா கூறியுள்ளார்.

பா. ரஞ்சித் தற்போது “நட்சத்திரம் நகர்கிறது” என பெயரிடப்பட்டுள்ள ஒரு படத்தை காதல் Drama திரைப்படமாக எடுத்துள்ளார். விரைவில் இந்த படம் வெளியாக உள்ளது.

தொடர்புடைய இணைப்புகள்

Chiyaan 61 Vikram Pa Ranjith Movie Poojai at NDFC

People looking for online information on Chiyaan61, G V Prakash Kumar, Pa Ranjith, Vikram will find this news story useful.