விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர் தொடர் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை சித்ரா. இவர் இதற்கு முன்பு பல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராகவும், சீரியல்களிலும் நடித்து இருந்தார், இருந்தாலும் இந்த தொடர் மூலம் வேற லெவல் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். இந்நிலையில் அவர் மரணமடைந்த செய்தி ரசிகர்களை மிகவும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. அவருடைய பாசிட்டிவ் குணம் தான் ரசிகர்களின் பேவரைட்டாக இருந்தது.
இந்நிலையில் இந்த முடிவை சித்ராவிடம் இருந்து யாரும் எதிர்பார்க்கவில்லை. இந்நிலையில் அவருடன் நடித்த நடிகர், நடிகைகளும், விஜய்டிவி பிரபலங்களும் தற்போது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகை சித்ராவின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. அதில் அவர் தான் ஒரு விஜய் ரசிகர் என்றும், தனது திருமணத்திற்கு நடிகர் விஜய்யை அழைக்க விரும்புவதாகவும். அதனால்தான் இதுவரை அவரை பார்க்க முயற்சித்தது இல்லை என்றும் கூறியுள்ளார். தனது திருமணம் பற்றி ஆயிரம் கனவுகள் வைத்திருந்த சித்ராவின் ஆசைகள் நிறைவேறாமல் போனது, பார்ப்பவர் மனதை உடைக்கும் வண்ணம் இருக்கிறது.