சித்ராவின் தாயார் சித்ராவின் அறையில் இருந்த Fan-ஐ பிடித்து இழுத்து கதறிய உருக்கமான வீடியோ வெளியாகியுள்ளது.
கடந்த வருடம் டிசம்பர் 9-ஆம் தேதி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ நடிகை சித்ரா சென்னை நசரத் பேட்டையில் உள்ள தனியார் விடுதியில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தென்னிந்திய திரையுலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பின்னர் இது தொடர்பாக சித்ராவின் கணவர் ஹேம்நாத் விசாரிக்கப்பட்டு கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டார். இப்படி தொடர்ந்த இந்த சம்பவத்தில் பல்வேறு கட்டங்களில் சித்ராவின் கணவர் ஹேம்நாத் சித்ரா மீது சந்தேகப்பட்டு துன்புறுத்தியதாக தகவல்கள் வெளியாகின.
ஆனால் சித்ரா தற்கொலை செய்துகொண்ட அந்த ஹோட்டல் அறை எண் 113 இதுவரை பூட்டியே இருந்தது. இந்நிலையில் அந்த அறையில் சித்ரா மற்றும் ஹேம்நாத்தின் பொருட்களை எடுத்துச் செல்ல சித்ரா மற்றும் ஹேம்நாத்தின் பெற்றோருக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அந்த அறைக்குள் சென்ற சித்ராவின் தாயார், சித்ரா தற்கொலை செய்துகொண்ட அந்த சீலிங் Fan-ஐ பிடித்து இழுத்து சித்ரா.. சித்ரா என கதறி அழுதார். அத்துடன் Fanக்கும் Bedக்கும் இருக்கும் உயரத்தை கணக்கிட்ட சித்ராவின் பெற்றோர் இப்படி தற்கொலை செய்துகொள்ள வாய்ப்பே இல்லை என்று கதறி அழுகிறார்கள்.
அத்துடன் ஹோட்டல் அறையில் இருந்த மது பாட்டிலை பார்த்த சித்ராவின் தந்தை இது எப்படி வந்தது என்று கேட்டதுடன் அதற்கு ஹேம்நாத் தான் காரணம் என்று கூறுகிறார். ஆனால் ஹோட்டல் ஊழியர்கள் இதுபோன்ற எதையும் சப்ளை செய்வதில்லை, வாடிக்கையாளர்கள் கொண்டுவருவதை தாங்கள் தடுப்பதில்லை என்று கூறினர். பின்னர் சித்ராவின் அம்மா சித்ராவின் உடைகள், பேன்சி பொருட்கள் உள்ளிட்ட அனைத்தையும் எடுத்துக்கொண்டார். முதலில் சித்ராவின் பெற்றோருக்கும், பின்னர் ஹேம்நாத்தின் பெற்றோருக்கும் அந்த அறையில் இருந்த உடமைகளை எடுத்துக்கொள்ள அனுமதி கொடுக்கப்பட்டது.
பின்னர் நானும் நம்பினேன், என் பொண்ணும் அவனை நம்பினா அவன் நம்பிக்கை துரோகம் செய்துவிட்டான் என சித்ராவின் தாயார் ஹேம்நாத்தை குறிபிட்டு புலம்பினார். பின்னர் ஹேம்நாத் பயன்படுத்திய பொருட்களை ஹேம்நாத்தின் தந்தை எடுத்துக்கொண்டார். அப்போது, ‘உங்க பையன் எங்க வீட்ல 15 நாள் இருந்தான். நாங்க உங்க பையன் உசுர கையில குடுதுட்டமா?’ என்று சித்ராவின் தரப்பினர் ஹேம்நாத்தின் தந்தையுடன் வாக்குவாதம் செய்தனர். பின்னர் இருதரப்பினரையும் அருகில் இருந்தவர்கள் சமாதானப்படுத்தினர். பின்னர் சித்ராவை நினைத்து சித்ராவின் தாயார் 113 அறையில் அழுதுகொண்டிருந்தார்.
தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிர் விலை மதிப்பில்லாதது. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.
ALSO READ: ஆக்ஷன் முடிஞ்சுது.. இது ரொமான்ஸ்!.. Legend சரவணன் படத்தின் பரபரப்பு ஸ்டில்ஸ்!