பொங்கலுக்கு ரிலீஸாகும் சிரஞ்சீவியின் புதிய படம்.. BTS போட்டோவுடன் வெளிவந்த ஷூட்டிங் அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மெகாஸ்டார் சிரஞ்சீவி, மாஸ் மஹாராஜா ரவி தேஜா நடிக்கும் மெகா154  படத்தின் படப்பிடிப்பு அப்டேட் வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | பிரபாஸ் - தீபிகா படுகோனே நடிக்கும் புதிய படத்தில் இணைந்த தேசிய விருது வென்ற Stunt Masters!

  மெகாஸ்டார் சிரஞ்சீவி மற்றும் டைரக்டர் பாபி (கே.எஸ். ரவீந்திரா) இணைந்து மெகா154 படத்தில் பணிபுரிகின்றனர்.

மாஸ் மஹாராஜா ரவி தேஜா ஒரு சக்திவாய்ந்த  வேடத்தில் இந்த படத்தில் நடிக்கிறார். கடைசி ஷெட்யூலில் ரவி தேஜா படக்குழுவில் இணைந்தார். சிரஞ்சீவிக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார்.

இன்று, ஹைதராபாத்தில் இந்த படத்தின் அடுத்த கட்ட நீண்ட படப்பிடிப்பை தொடங்கி உள்ளனர். இந்த படப்பிடிப்பில் மற்ற நடிகர்களுடன் சிரஞ்சீவியும் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார். இந்த சமீபத்திய ஷூட்டிங் ஷெட்யூலில் படத்தின் முக்கிய காட்சிகள் படமாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மெகாஸ்டார் சிரஞ்சீவியின் தீவிர ரசிகரான பாபி, படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை மாஸ்  கூறுகள் போதுமான அளவு இருக்கும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.  இந்த படத்தில் சிறந்த  டெக்னீஷியன்கள் குழு பல்வேறு பணிகளை கவனித்து வருகிறது.

நவீன் யெர்னேனி மற்றும் ஒய் ரவிசங்கர் ஆகியோர் இப்படத்தை தயாரிக்கின்றனர், ஜி.கே.மோகன் இணை தயாரிப்பாளராக பணியாற்றுகிறார். Mega154 படத்திற்கு ராக்ஸ்டார் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க, ஆர்தர் ஏ வில்சன் ஒளிப்பதிவு செய்கிறார். நிரஞ்சன் தேவராமனே எடிட்டராகவும், ஏஎஸ் பிரகாஷ் தயாரிப்பு வடிவமைப்பாளராகவும் பணியாற்றுகிறார். சுஷ்மிதா கொனிடேலா ஆடை வடிவமைப்பாளர். கதை மற்றும் வசனத்தை பாபி எழுதியுள்ளார், கோனா வெங்கட் மற்றும் கே சக்ரவர்த்தி ரெட்டி திரைக்கதையை எழுதியுள்ளனர். எழுத்துத் துறையில் ஹரி மோகன கிருஷ்ணா மற்றும் வினீத் பொட்லூரி ஆகியோரும் அடங்குவர்.

Mega154 திரைப்படம் 2023 பொங்கல் மஹாசங்கராந்தியின் போது திரைக்கு வரவுள்ளது.

Also Read | பொன்னியின் செல்வன் 'நந்தினி' ஐஸ்வர்யா ராயுடன் வானதி.. வெளியிட்ட வைரல் ஃபோட்டோ!

தொடர்புடைய இணைப்புகள்

Chiranjeevi Shruthi Haasan Mega 154 Movie Shooting Update

People looking for online information on Chiranjeevi, Mega 154 Movie, Mega 154 Movie Shooting Update, Shruthi Haasan will find this news story useful.