லூசிஃபர் ரீமேக்கில் நடிக்கும் சிரஞ்சீவி.. மாஸ், ஆக்ஷன் என பட்டையைக் கிளப்பும் டீசர்!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சிரஞ்சீவி, சல்மான் கான் நடிக்கும் 'காட்ஃபாதர்' திரைப்படத்தின் டீஸர் தற்போது வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

மலையாளத்தில் நடிகர் பிருத்வி ராஜ் இயக்கத்தில் வெளியான அரசியல் த்ரில்லர் படம் 'லூசிஃபர்'. இந்த படத்தில் மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் மோகன்லால் கதாநாயகனாக நடித்திருந்தார்.  மேலும், மஞ்சு வாரியர், விவேக் ஓபராய், டொவினோ தாமஸ் ஆகியோரும் இப்படத்தில் நடித்து இருந்தனர்.

இந்தப் படத்தின் இயக்குனரான பிருத்வி ராஜ், கெஸ்ட் ரோலிலும் தோன்றி இருந்தார். மலையாள சினிமாவில் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்ற லூசிஃபர் திரைப்படம், பாக்ஸ் ஆபீஸ் ரீதியாகவும் நிறைய சாதனைகளை புரிந்திருந்தது.

இதனைத் தொடர்ந்து, லூசிஃபர் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிகர் சிரஞ்சீவி நடிக்கிறார். தெலுங்கில் 'காட்ஃபாதர்' என்னும் பெயரில் தயாராகி வரும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், அதிகாரபூர்வமாக கடந்த ஜூலை மாதம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது. சிரஞ்சீவி சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் கறுப்பு நிற உடையை அணிந்து, நாற்காலியில் அமர்ந்த படி முதல் லுக் போஸ்டர் அமைந்தது.

காட்ஃபாதர் திரைப்படத்தை மோகன் ராஜா இயக்கியுள்ள நிலையில், SS தமன் இந்த படத்தின் இசையமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார். மேலும், பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் நிலையில், நயன்தாரா, பூரி ஜெகநாத், சத்யா தேவ், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலரும் காட்ஃபாதர் திரைப்படத்தில் நடித்துள்ளனர்.

இந்நிலையில், காட்ஃபாதர் படத்தின் டீசர், சிரஞ்சீவியின் பிறந்த நாள் ஸ்பெஷலாக இன்று (21.08.2022) வெளியாகும் என படக்குழு, கடந்த சில தினங்களுக்கு முன் அறிவித்திருந்தது. அதன் படி, தற்போது காட்ஃபாதர் படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. சிரஞ்சீவியின் மாஸ் காட்சிகள் உள்ளிட்டவை டீசரில் இடம்பெற்றுள்ள நிலையில், ரசிகர்கள் மத்தியில் திரைப்படத்தின் மீதான ஆவலையும் உருவாக்கி உள்ளது.

அக்டோபர் மாதம் ஐந்தாம் தேதி, தசரா தினத்தன்று இந்த படம் ரிலீஸ் ஆகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய இணைப்புகள்

Chiranjeevi next godfather movie teaser released

People looking for online information on Chiranjeevi, Godfather Teaser, Mohan Raja, Nayanthara, Salman Khan, SS Thaman will find this news story useful.