சிரஞ்சீவி நடிக்கும் லூசிபர் தெலுங்கு ரீமேக்.. நயன்தாராவின் தோரணையான மாஸ் போஸ்டர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சிரஞ்சீவி & சல்மான் கான் நடிக்கும் 'காட்பாதர்' படத்தின் நயன்தாரா லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | 'திருச்சிற்றம்பலம்' 'எமோஷனல்' சீனை வேற லெவலில் Sync செய்த ரசிகர்கள்! PBS பகிர்ந்த VIDEO!

மலையாளத்தில் நடிகர் பிரித்வி ராஜ் இயக்கத்தில் வெளியான அரசியல் த்ரில்லர் படம் 'லூசிஃபர்'. இந்த படத்தில் மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் மோகன்லால் கதாநாயகனாக நடித்து இருந்தார்.  மேலும், மஞ்சு வாரியர், விவேக் ஓபராய், டொவினோ தாமஸ் ஆகியோரும் இப்படத்தில் நடித்து இருந்தனர்.

இந்தப் படத்தின் இயக்குனரான பிரித்வி ராஜ் கெஸ்ட் ரோலில் தோன்றி இருந்தார். இந்தப் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிகர் சிரஞ்சீவி நடிக்கிறார். தெலுங்கில் 'காட்ஃபாதர்' என்னும் பெயரில் தயாராகி வரும் இப்படத்தின்  ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படத்தின் தயாரிப்பாளர்கள் சில நாட்களுக்கு முன் வெளியிட்டனர்.

சிரஞ்சீவி முதல் முறையாக சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் கறுப்பு நிற உடையை அணிந்தபடி, நாற்காலியில் அமர்ந்தபடி முதல் லுக் போஸ்டர் அமைந்தது.

முதல் லுக் டீஸர் வீடியோவில், சிரஞ்சீவியின் கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தும் காட்சியும் வெளியாகி இருந்தது. ஆயிரக்கணக்கான கட்சித் தொண்டர்கள் அவருக்காக அலுவலகத்திற்கு வெளியே காத்திருக்கையில், மெகாஸ்டார் சிரஞ்சீவி ஒரு அம்பாசிடர் காரில் வருகிறார், அதை நிறுத்தும் போது சுனில் அவருக்காக கதவைத் திறக்கிறார். கடைசியாக, காரில் இருந்து வெளியே வந்து,  அலுவலகத்திற்குள் சிரஞ்சீவி செல்கிறார். இந்த காட்சி முதல் லுக் வீடியோவில் அமைந்திருந்தது.

SS தமன் இந்த படத்தின் இசையமைப்பாளராக பணிபுரிகிறார். காட்ஃபாதர்  படத்தை மோகன் ராஜா இயக்க, ஆர்.பி.சௌத்ரி மற்றும் என்.வி.பிரசாத் தயாரிக்க, கொனிடேலா சுரேகா வழங்குகிறார்.

இந்த படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், நயன்தாராவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பூரி ஜெகநாத் மற்றும் சத்யா தேவ் மற்ற முக்கிய நடிகர்களாக படத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் இன்று நயன்தாராவின் புதிய கேரக்டர் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. சத்யபிரியா ஜெய்தேவ் எனும் கதாபாத்திரத்தில் நயன்தாரா இந்த படத்தில் நடித்துள்ளார்.

AK61 & வலிமை படங்களின் ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, சுரேஷ் செல்வராஜன் கலை இயக்குநராக பணியாற்றுகிறார்.

இந்த ஆண்டு தசராவுக்கு (05.10.2022) காட்பாதர் படத்தை திரையரங்குகளில் வெளியிட படக்குழுவினர்  முடிவு செய்துள்ளனர். ஏற்கனவே இந்த படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

Also Read | VIKRAM VEDHA: ஹிருத்திக் ரோஷன் & சயிப் அலிகானின் மாஸ் ஆக்சன் காட்சிகள்.. வெளியான சூப்பர் டிரெய்லர்!

தொடர்புடைய இணைப்புகள்

Chiranjeevi Godfather Movie Nayanthara Character Look Poster

People looking for online information on Chiranjeevi, Godfather, Godfather Movie, Nayanthara, Nayanthara Character Look Poster will find this news story useful.