சிரஞ்சீவி நடிப்பில் அடுத்து உருவாகும் ஆச்சார்யா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
”மனச அங்கயே இருக்கு”… இன்னும் மறக்க முடியல போல…. திவ்யபாரதி வைரல் போஸ்ட்
சினிமா- அரசியல் – சினிமா…
தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டாராக ஜொலித்த சிரஞ்சீவி ஒரு கட்டத்தில் அரசியலுக்கு சென்றதால் சுமார் 10 ஆண்டுகளாக நடிக்காமல் இருந்தார். ஒரு கட்டத்தில் அரசியலில் இருந்து ஒதுங்கிய அவர் மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ளார். 10 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் கைதி நம்பர் 150 என்ற படத்தில் நடித்தார். இந்த படம் விஜய் நடிப்பில் உருவான கத்தி படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் ஆகும். அந்த படத்துக்கு சைரா நரசிம்மா ரெட்டி என்ற படத்திலும் நடித்தார்.
காட்ஃபாதர்….
மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற லூசிபர் படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையை நடிகர் சிரஞ்சீவி பெற்று தற்போது அந்த படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கில் 'காட்ஃபாதர்' என்னும் பெயரில் தயாராகி வரும் இப்படத்தை முதலில் சாஹு படத்தின் இயக்குனரான சுஜித் இயக்குவதாக இருந்தது. அதன்பிறகு வேலைக்காரன், தனி ஒருவன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மோகன் ராஜா இப்படத்தினை இயக்குவார் என அறிவிக்கப்பட்டது. இந்த படத்தில் சல்மான் கான் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இந்த படம் போலவே அஜித் நடிப்பில் உருவான வேதாளம் படத்தின் ரீமேக்கான போலே ஷங்கர் படத்திலும் சிரஞ்சீவி நடித்து வருகிறார்.
ஆச்சார்யா…
இதற்கிடையில் சிரஞ்சீவி தன்னுடைய மகன் ராம்சரணுடன் இணைந்து நடித்துள்ள படம் ஆச்சார்யா. இந்த படத்தில் ராம்சரண் ஒரு கௌரவ வேடத்தில் நடித்துள்ளார். கொரட்டாலா சிவா இயக்கியுள்ள இந்த படத்துக்கு மணி ஷர்மா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் ரிலீஸ் பிப்ரவரி மாதமே திட்டமிடப்பட்டது. ஆனால் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக தள்ளிவைக்கப்பட்ட நிலையில் தற்போது ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் 29 ஆம் தேதி இந்த படம் ரிலீஸாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படத்தின் டிரைலர் வரும் ஏப்ரல் 12 ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது சம்மந்தமாக ராம்சரண் மற்றும் சிரஞ்சீவி இருக்கும் போஸ்டர் வெளியிடப்பட்டு வைரலாகி வருகிறது. ராம்சரண் நடிப்பில் கடந்த மாதம் RRR திரைப்படம் வெளியாகி உலகளவில் 1000 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தகக்து.
கமலின் சூப்பர் ஹிட் படத் தலைப்பில் சதீஷின் அடுத்த படம்… சிம்பு வெளியிட்ட exciting போஸ்டர்!