சூப்பரோ சூப்பர்!!!.. நகைச்சுவை நடிகர் சின்னி ஜெயந்த் மகனுக்கு குவியும் பாராட்டுகள்!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

1980-கள் மற்றும் 1990-களில் பல தமிழ் படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றவர் நகைச்சுவை நடிகர் சின்னி ஜெயந்த்.

நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாமல், நடிகர் சின்னி ஜெயந்த் திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் பலகுரலில் பேசும் கலைஞர் என பன்முகம் கொண்டவராக விளங்குபவர்.

1984-ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடித்த ‘கை கொடுக்கும் கை’ படத்தில் நடித்ததன் மூலம் தமிழ்த் திரைப்படத்துறையில் பிரபலமான சின்னி ஜெயந்த், தொடர்ந்து ரஜினியுடன் அதிசய பிறவி உள்ளிட்ட படங்களிலும் நடித்தார். பல முன்னணி நடிகர்களின் படங்களுடன், 300க்கும் அதிகமான திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ள சின்னி ஜெயந்த், 30 வருடங்களுக்கு மேல் திரைத்துறையில் நடித்து வருகிறார்.

குறிப்பாக, கடந்த 2009 ஆம் ஆண்டு தமிழக அரசின் கலைமாமணி விருதினை பெற்ற இவர், பல குரல் ஆராய்ச்சி செய்து வருவதற்காக சர்வதேச திறந்தவெளி மாற்று மருத்துவப் பல்கலைக்கழகத்தின் கெளரவ டாக்டர் பட்டமும் பெற்றுள்ளார்.

இந்நிலையில் தான், இவரது மகன் ஸ்ருதன் ஜெய் நாராயணன் (Srutanjay Narayanan) 2019 ஐஏஎஸ் தேர்வுகளில் 74-வது ரேங்க் பெற்று, இப்போது துணை கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளதால், அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

ஆம், தூத்துக்குடி மாவட்டத்தின் துணை ஆட்சியராக ஸ்ருதன் ஜெய் நாராயணன் தற்போது நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக, ஸ்ருதன் ஜெய் தமது சர்வீஸில் கல்வி, வர்த்தகம் மற்றும் பெண்களுக்கு தேவையான அதிகாரத்தை அளித்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்த விரும்புவதாக குறிப்பிட்டிருந்தார்.

Chinnijayanth son srutanjay narayanan now deputy collector

People looking for online information on Chinni jayanth, Srutanjay narayanan will find this news story useful.