தழும்புக்கு காரணம் தாமரை - நமீதா மாரிமுத்து FIGHT-ஆ?.. மனம் திறந்த IYKKI BERRY , NAMITHA வீடியோ #BIGGBOSSTAMIL5

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவி பிக்பாஸில் இருந்து வெளியேறிய போட்டியாளர்களான ஐக்கி மற்றும் நமீதா மாரிமுத்து இருவரும் இணைந்து ரசிகர்களுடன் உரையாடிய சமூக வலைதள வீடியோவை பகிர்ந்து இருக்கின்றனர்.

Advertising
>
Advertising

இந்த வீடியோவில் பேசிய ஐக்கி, “தாமரைக் அக்கா கன்னத்தில் ஒரு கட் இருக்கிறது, அது நமீதாவுக்கும் தாமரைக்கும் நடந்த சண்டையில் இருந்து வந்ததா? என்று கேட்கிறார்கள். இது எப்படா நடந்துச்சு? நான் பார்க்கலையே?” என்று சிரித்தபடி ஐக்கி சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது நமீதா மாரிமுத்து, “அது தாமரை வாக்ஸ் செய்ததால் வந்த தழும்பு” என்று கூறுகிறார்.

அப்போது இடைமறித்த ஐக்கி, “அதற்கு பின்னால் இன்னொரு கதையும் இருக்கிறது. ஆக்சுவலி தாமரை அக்கா கன்னத்தில் இருக்கும் அந்த தழும்பு என்னுடைய நகத்தால் கீறப்பட்டதுதான்!” என்று சொல்லிவிட்டு சிரிக்கிறார். அதற்கு காரணமும் தானும் தாமரையும் அவ்வப்போது கிள்ளி விளையாண்டு கொண்டதுதான் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

அத்துடன் நமீதா மாரிமுத்து பேசும்போது, “ஐக்கியை எனக்கு 5 வருடமாக தெரியும்!” என்று குறிப்பிட்டிருந்தார். அப்போது இடைமறித்து பேசிய ஐக்கி தானும் நமீதா மாரிமுத்துவும் இரண்டு வருடங்களுக்கு முன்பாக பெண்கள் மற்றும் திருநங்கைகள் உள்ளிட்டோருக்கான ஒரு பாடலை திட்டமிட்டிருந்ததாகவும், கிட்டத்தட்ட எல்லாம் முடிந்து கடைசி நேரத்தில் புரொடக்ஷன் சிக்கல்களால் அது நிறுத்தப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

மேலும் பேசிய ஐக்கி, தானும் நமீதா மாரிமுத்துவும் இன்னும் நல்ல நண்பர்களாக தொடர்வதாகவும், அதற்கு பிக்பாஸ் காரணமாக அமைந்ததாகவும் குறிப்பிட்டிருக்கிறார். மேலும் பிக்பாஸ் செல்லும்வரை இருவரும் பிக்பாஸில் கலந்து கொள்ளும் விஷயம் இருவருக்குமே தெரியாது என்றும் பிக்பாஸில் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டதும் இன்ப அதிர்ச்சி அடைந்ததாகவும் ஐக்கி குறிப்பிட்டிருக்கிறார்.

அதன் பின் பேசிய நமீதா மாரிமுத்து, “பிக்பாஸ் வீட்டில் இருக்கும் அனைத்து போட்டியாளர்களுடனும் ஒரு ரீயூனியன் சந்திப்புக்காக நாங்கள் இருவரும் காத்திருக்கிறோம்!” என்று குறிப்பிட்டார். நமீதா மாரிமுத்து மற்றும் ஐக்கி பேசியிருக்கும் பல்வேறு விஷயங்களை இணைப்பில் இருக்கும் சமூக வலைதள வீடியோவில் காணலாம்.

தழும்புக்கு காரணம் தாமரை - நமீதா மாரிமுத்து FIGHT-ஆ?.. மனம் திறந்த IYKKI BERRY , NAMITHA வீடியோ #BIGGBOSSTAMIL5 வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Chin mark thamarai namitha marimuthu fight iykki breaks out video

People looking for online information on Bigg Boss 5, Bigg Boss 5 Tamil, Bigg Boss Tamil 5, Namitha Marimuthu, Namitha marimuthu bigg boss, Namitha marimuthu eliminated, Namitha marimuthu interview, Namitha marimuthu iykki, Vijay, Vijay tv will find this news story useful.