BREAKING : சிம்புதேவன் இயக்கத்தில் யோகி பாபு, கௌரி கிஷன்.. ஷூட்டிங் பத்தி வெளியான சூப்பர் தகவல்!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

"இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி" திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் சிம்புதேவன். இந்த திரைப்படத்தில் வடிவேலு இரட்டை வேடங்களில் நடித்திருந்த சூழலில் படம் முழுக்க முழுக்க நகைச்சுவை கலந்த வகையில் அசத்தலாகவும் அமைந்திருந்தது.

Images are subject to © copyright to their respective owners

Advertising
>
Advertising

இயக்குனர் சிம்புதேவன்

ஃபேண்டஸி கதைகளை மிகவும் அசத்தலாக தனக்கே உரிய பாணியில் எடுப்பதில் வல்லவரான இயக்குனர் சிம்புதேவன், சந்தானம் நடிப்பில் அறை எண் 305 ல் கடவுள், ராகவா லாரன்ஸ் நடிப்பில் இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், அருள்நிதி நடிப்பில் இரு கன்னியும் மூன்று களவாணிகளும் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி இருந்தார்.

Images are subject to © copyright to their respective owners

இதனைத் தொடர்ந்து, நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி இருந்த புலி திரைப்படத்தையும் சிம்புதேவன் இயக்கி இருந்தார். தொடர்ந்து, 2021 ஆம் ஆண்டு கசடதபற என்ற ஹைப்பர் லிங்க் திரைப்படம் ஒன்றையும் உருவாக்கி இருந்தார் சிம்புதேவன். இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்த சூழலில் கடந்த ஆண்டு வெளியாகியிருந்த விக்டிம் ஆந்தாலாஜியில் 'கொட்டாய் பாக்கு வத்தலும் மொட்டைமாடி சித்தரும் என்ற ஒரு பகுதியையும் சிம்பு தேவன் இயக்கி இருந்தார்.

தமிழ் இயக்குனர்களில் தனக்கான ஒரு ஸ்டைலில் திரைப்படம் இயக்குவதில் தேர்ந்த சிம்பு தேவன், தற்போது அடுத்ததாக இயக்க உள்ள திரைப்படம் குறித்து நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து பிரத்யேகமான ஒரு தகவல் நமக்கு கிடைத்துள்ளது. நமக்கு கிடைத்த தகவலின் படி, இயக்குனர் சிம்புதேவன் இயக்கத்தில் உருவாகும் அடுத்த திரைப்படத்தில் யோகி பாபு மற்றும் கௌரி கிஷன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர்.

Images are subject to © copyright to their respective owners

தமிழ் சினிமாவில் தற்போது எக்கச்சக்கமான காமெடி கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் யோகி பாபு. அதே வேளையில், தர்மபிரபு, பொம்மை நாயகி உள்ளிட்ட திரைப்படங்களில் முதன்மை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். மேலும், 96, மாஸ்டர் உள்ளிட்ட பல திரைப்படங்கள் மூலம் பிரபலம் ஆன நடிகை கௌரி கிஷன், சிம்பு தேவன் படத்தில் இணைந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றது.

Images are subject to © copyright to their respective owners

மேலும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தென்காசியில் ஆரம்பமாகி உள்ளதாகவும் நமக்கு கிடைத்த பிரத்யேகமான தகவல்கள் தெரிவிக்கின்றது.

தொடர்புடைய இணைப்புகள்

Chimbu Deven next movie yogi babu and gouri kishan in lead deets

People looking for online information on Chimbu Deven, Gouri Kishan, Yogi Babu will find this news story useful.