புதுவை முதல்வர் ரங்கசாமி - விஜய் சந்திப்பு.. வெளியான புகைப்படங்கள்.. பின்னணி இது தான்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

புதுச்சேரி: முதல்வர் ரங்கசாமி நடிகர் விஜய்யை நேற்று திடீரென்று சந்தித்து பேசியது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertising
>
Advertising

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர்  விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தினை நெல்சன் திலீப்குமார் இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்த நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகிறது.

காத்திருக்கும் ரசிகர்கள்

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இவர்களுடன் செல்வராகவன், விடிவி கணேஷ், யோகிபாபு ஆகியோர் நடிக்கின்றனர். இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார், ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் படக்குழு கடற்கரையில் இருப்பது போன்ற புகைப்படம் வெளியாகி வைரல் ஆனது. விஜய் ரசிகர்கள் பீஸ்ட் படத்திற்கு மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்.  இந்த படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியா, டெல்லி, சென்னையில் நடைபெற்று வந்தது. 

BREAKING: விஜய் நடிக்கும் BEAST படத்தின் ரிலீஸ் எப்போ? எங்க ஆட்டம் வெறித்தனமா இருக்கும்!

விஜய் மக்கள் இயக்கம்

இந்நிலையில், தமிழ்நாடு ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலில் போட்டியிட்ட நடிகர் விஜயின் மக்கள் இயக்கம் தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும்  போட்டியிடுகிறது. வரும் பிப்ரவரி 19இல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. பிப்ரவரி 22இல் முடிவுகள் அறிவிப்புகள் வெயிடப்படும்.  விஜய் மக்கள் இயக்கத்தினர் கட்சியின் கொடி மற்றும் விஜய் புகைப்படத்தை பயன்படுத்தி பரப்புரை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பல்வேறு மாவட்டங்களில் விஜய் மக்கள் இயக்கத்தினர் வேட்புமனு தாக்கல் செய்து பிரச்சாரத்தை ஆரவாரமாக தொடங்கி உள்ளனர்.

ரங்கசாமி - விஜய் சந்திப்பு

இந்நிலையில், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி சென்னை பனையூரில் உள்ள விஜய் வீட்டுக்கு சென்ற முதல்வர் ரங்கசாமி நேற்று மாலை அவரை சந்தித்து ஒரு மணி நேரம் பேசினார். இதுகுறித்து முதல்வர் ரங்கசாமியிடம் கேட்டபோது,   "மரியாதை நிமித்தமான சந்திப்பு" என்று குறிப்பிட்டார்.இந்த சந்திப்பின் போது, அகில இந்திய  தளபதி விஜய் மக்கள் இயக்கம்  பொதுச் செயலாளர் புஸ்ஸி  ஆனந்த் உடனிருந்தார். 

தற்போது விஜய் தரப்பில் மரியாதை நிமித்த சந்திப்பு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, நடிகர் விஜய் மற்றும் முதல்வர் ரங்கசாமி சந்திப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய இணைப்புகள்

Chief Minister Rangasamy actor Vijay meeting At viral Photo

People looking for online information on Actor Vijay, Beast, Chennai, CM Rangasamy, Neelankarai, Vijay rangasamy meeting, Viral photo will find this news story useful.