’‘ஸ்டாலின்தான் வராரு...“ இளம் இசை அமைப்பாளரின் திருமணத்தில் முதல்வர் ஸ்டாலின்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

‘ஸ்டாலின் தான் வராரு... விடியல் தர போராரு‘ பிரபலமான இசை ஆல்பத்தின் இளம் இசை அமைப்பாளரின் திருமணத்தில் தமிழ்நாடு முதல்வர் மற்றும் நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்தினர்.

தமிழ்நாட்டில் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியான நாளில் இருந்தே தமிழ்நாடு முழுவதும் தி.மு.க தரப்பில் இருந்து ‘ஸ்டாலின்தான் வராரு.... விடியல் தர போராரு' என்கிற பாடல் பட்டி தொட்டியெங்கும் ஒலித்தது. தி.மு.க பிரச்சாரத்திற்கு பயன்படுத்திய இந்த ஆல்பத்திற்கு இசை வடிவம் கொடுத்தவர் ஜெரால்டு என்கிற ஒரு இளம் இசை அமைப்பளார்.

கடந்த ஜூன் 30 ஆம் தேதி இவருக்கும் ப்ரீஷி சாந்தனா என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது.  பார்க் ஹையாட் ஹோட்டலில்  நடைபெற்ற இந்த திருமணத்தில் தமிழ்நாடு முதல்வர் எம்.கே.ஸ்டாலின், நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்தினர்.

இவர்களுடன் கவிபேரரசு வைரமுத்து, மதன் கார்க்கி ஆகியோர் கலந்துக்கொண்டு மணமக்களை வாழ்த்தினர். இந்தப் புகைப்படம் தற்போது வெளியாகி, அந்தப் பாட்டுக்கு இவர்தான் இசை அமைத்தாரா என்று வியப்பாக  பார்த்து வருகிறார்கள்.

’‘ஸ்டாலின்தான் வராரு...“ இளம் இசை அமைப்பாளரின் திருமணத்தில் முதல்வர் ஸ்டாலின்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Chief Minister attended the wedding of the young music composer

People looking for online information on Kaviperarasu Vairamuthu, Udhayanidhi Stalin will find this news story useful.