44 ஆவது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி, சென்னை மகாபலிபுரத்தில் வைத்து, வருகிற ஜூலை 28 தொடங்கி, ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

Also Read | Breaking: "வாரிசு படத்தில் விஜய்யோட பேரு இது தானா??.." அதிரடி 'Update'.. "கூடவே இன்னொரு சர்ப்ரைஸும்.."
இந்த சர்வதேச செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளில் கலந்து கொள்ள, சுமார் 180 க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து, 2000 செஸ் வீரர் மற்றும் வீராங்கனைகள் வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
முன்னதாக, 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை முன்னிட்டு, கடந்த ஜூன் மாதம் 19 ஆம் தேதி, டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, ஒலிம்பியாட் தீபத்தினை ஏற்றி வைத்து, தீபச்சுடர் ஓட்டத்தினை தொடங்கி வைத்தார்.
இந்த ஒலிம்பியாட் தீபம், மொத்தம் நாற்பது நாட்களில், இந்தியாவில் 26 மாநிலங்களில் உள்ள சுமார் 75 நகரங்களில் பயணித்து, பின்னர் இறுதியாக மாமல்லபுரம் வந்தடைய உள்ளது. செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சி தொடர்பாக பிரம்மாண்ட ஏற்பாடுகளும் தமிழக அரசின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதே போல, சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் துவக்க விழாவுக்கான ஏற்பாடுகளும் மிக வேகமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் Anthem வீடியோ, தற்போது வெளியாகி உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன், இதன் டீசர் வீடியோ வெளியாகி இருந்த நிலையில், தற்போது இதன் முழு வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது.
இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கி உள்ள இந்த பாடலை இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைத்துள்ளார். பாடல் வரிகளை விக்னேஷ் சிவன் மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் ஆகியோர் சேர்ந்து எழுதி உள்ளதையடுத்து, இந்த செஸ் ஒலிம்பியாட் Anthem வீடியோவில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் ஆகியோரும் இணைந்து தோன்றி உள்ளனர். பிரபல இயக்குனர் ஷங்கரின் மகளும், நடிகையுமான அதிதி ஷங்கரும் இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளார்.
மகாபலிபுரத்தில் பரதநாட்டியம் காட்சிகளும், சென்னை நேப்பியர் பாலத்தில் ரஹ்மான் மற்றும் ஸ்டாலின் தோன்றும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளது. பாடிக் கொண்டே குட்டி குட்டி ஸ்டெப்களை ரஹ்மான் போட, மறுபக்கம் மாஸான நடையுடன் தமிழக முதல்வர் ஸ்டாலினும் இந்த வீடியோவில் தோன்றுகிறார்.
செஸ் ஒலிம்பியாடிற்கு வருகை தரும் வீரர்கள் உள்ளிட்டோரை வரவேற்கும் வகையில் அமைந்துள்ள 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் வீடியோ, தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.
Also Read | "என்ன துன்புறுத்துறாங்க, ஏதாவது பண்ணுங்க.." பிரபல நடிகையின் பதிவால் பரபரப்பு