"தளபதி 67" டைட்டில் ANNOUNCE பண்ணதும்.. சிஎஸ்கே போட்ட சூப்பர் ட்வீட்!!.. உற்சாகத்தில் ரசிகர்கள்!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடித்து வரும் தளபதி 67 என குறிப்பிடப்பட்டு வந்த படத்தின் தலைப்பு குறித்த அறிவிப்பு ப்ரோமோ வீடியோவுடன் வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

Images are subject to © copyright to their respective owners.

Also Read | "பெண் என நினைத்து தூக்கிட்டு போய்ட்டாங்க".. மறைந்த நெல்லை தங்கராஜ் வாழ்வின் துயரமான மறுபக்கம்.. THROWBACK!!

வாரிசு படத்தை தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ள படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி இருந்தது.

இதனைத் தொடர்ந்து, இந்த படத்தில் இருக்கும் நடிகர், நடிகைகள் உள்ளிட்ட படக்குழுவினர் குறித்த அறிவிப்பும் வெளியாகி இருந்தது. கடந்த சில தினங்களாகவே லோகேஷ் - விஜய் இணையும் படம் குறித்த அறிவிப்புகள் இணையத்தை அதிகம் ஆக்கிரமித்திருந்தது.

அந்த வகையில், அர்ஜுன், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், கெளதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், மேத்யூ தாமஸ், சாண்டி, ப்ரியா ஆனந்த் உள்ளிட்டோர் இந்த படத்தில் நடிக்கின்றனர். மேலும், 14 ஆண்டுகளுக்கு விஜய்யின் திரைப்படத்தில் நடிக்க உள்ளார் த்ரிஷா.

Images are subject to © copyright to their respective owners.

ராக்ஸ்டார் அனிருத், இந்த படத்தின் மூலம் நான்காவது முறையாக தளபதி விஜய்யின் படத்திற்கு இசையமைக்க உள்ளார். இந்த படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய,  படத்தொகுப்பை பிலோமின் ராஜூம், கலை இயக்குனராக N.சதீஷ்குமாரும், நடன இயக்கத்தை தினேஷ் மாஸ்டரும் மேற்கொள்கிறார்கள். இந்த படத்தின் வசனங்களை இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இயக்குனர் ரத்னகுமார் மற்றும் தீரஜ் வைத்தி ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர். சண்டை காட்சிகளை அன்பறிவ் மாஸ்டர்கள் இயக்க உள்ளனர்.

S.லலித்குமாரின் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் இணை தயாரிப்பாளராக ஜெகதீஷ் பழனிசாமி இணைந்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி 2ஆம் தேதி துவங்கியது. அடுத்த கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடக்க உள்ளது.

Images are subject to © copyright to their respective owners.

இதனைத் தொடர்ந்து, சமீபத்தில் படத்தின் தலைப்பை ப்ரோமோ வீடியோவுடன் படக்குழு அறிவித்துள்ளது. பேக்கரியில் சாக்லேட் செய்யும் நடிகர் விஜய்,  ஆக்ரோஷமான லுக்கில் அதே பேக்கரியில் இரும்பு அடித்து வாள் செய்வது போல் ப்ரோமோ வீடியோ காட்சிகள் அமைந்துள்ளன. இந்த படத்திற்கு லியோ என பெயரிடப்பட்டுள்ளது. இது தொடர்பான ப்ரோமோ வீடியோ, இணையத்தில் ட்ரெண்டிங்கில் இருக்கும் சூழலில், பிரபல ஐபிஎல் அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ட்விட்டர் பக்கத்தில் "Leo 🦁🔥" என குறிப்பிட்டு ட்வீட்  ஒன்று பகிரப்பட்டுள்ளது.

Images are subject to © copyright to their respective owners.

சென்னை அணியின் லோகோவில் சிங்கம் இருக்கும் நிலையில், அதன் பெயரான "Leo" வை குறிப்பிட்டு தான் அப்படி ட்வீட் செய்துள்ளனர். அதே போல, ட்விட்டர் அட்மினின் பெயரும் Leo என பலமுறை குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், அவர்களையும் ஒப்பிட்டு இந்த ட்வீட்டை அவர்கள் பகிர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read | ரியலாவே ரிகிரியேட் ஆன ரீல் Scene.. Leo -க்காக விமானத்தில் பறந்த விஜய், த்ரிஷா.. Trending

தொடர்புடைய இணைப்புகள்

Chennai Super Kings tweet after Thalapathy 67 title announcement

People looking for online information on Chennai Super Kings, CSK, Leo, Thalapathy 67 title will find this news story useful.