சென்னை, 13 பிப்ரவரி 2022: காசி திரையரங்கத்தின் எம்.டி. மறைந்தது குறித்த சோக தகவலை, அந்நிர்வாகம் பகிர்ந்துள்ளதை அடுத்து, ரசிகர்கள் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
காசி திரையரங்கம்
சென்னை காசி திரையரங்கம் என்றாலே, பலருக்கும் பிடித்தமானது. அதற்கு முக்கிய காரணம் காசி திரையரங்கம் மெயினான ஒரு ஏரியாவில் அமர்ந்திருப்பதுடன், ரசிகர்களாலும் பொதுமக்களாலும் எளிதில் அணுக கூடிய வசதியுடன் இருப்பதுதான்.
டால்பி அட்மாஸ்பியர்
அண்மையில் காசி திரையரங்கின் உள்கட்டமைப்பு முழுவதும் மாற்றப்பட்டு புத்தம் பொலிவுடன் காணப்பட்டதை அடுத்து, இன்னும் இந்த திரையரங்குக்கான திரைப்பட வாடிக்கையாளர்கள் அதிகரித்தனர். திரைப்படங்கள் ஒரு அனுபவம். அந்த அனுபவத்தை காட்சி வாயிலாகவும், ஒலி வாயிலாகவும் (டால்பி அட்மாஸ்பியர்) நிறைவாக கொடுக்கும் அளவில் டெக்னிக்கலாகவும் காசி திரையரங்க அமைப்பு உருப்பெற்று நிற்கிறது.
2021 டாப் 5 படங்கள்
கடந்த 2021-ஆம் ஆண்டு டாப் 5 திரைப்படங்களாக குறிப்பிடப்பட்ட மாஸ்டர், அண்ணாத்த, மாநாடு, டாக்டர் ஆகிய படங்கள் (வரிசைகரப்படி) அனைத்துமே காசி திரையரங்கில் திரையிடப்பட்டு ரசிகர்களின் ஆதரவையும் வரவேற்பையும் பெற்றிருந்தன. குறிப்பாக காசி திரையரங்கில் போடப்படும் ரசிகர்கள் ஷோ எனப்படும் அதிகாலை ஷோவுக்காக குவியும் ரசிகர்கள் தனி ரகம்.
எம்.டி. திரு.பழனியப்பன் மறைவு
இப்படி திரைப்படங்களை திரையிட்டு பொழுதுபோக்கையும், கலையையும் நேசிக்கும் மக்களின் முன்னணி திரையரங்காக விளங்கும் காசி திரையரங்கம் மற்றும் வித்யா திரையரங்க எம்.டி. திரு. SP பழனியப்பன் மறைந்துவிட்டதாக காசி திரையரங்க நிர்வாகம் தம்முடைய அதிகாரப்பூர்வ பக்கத்தில் அறிவித்துள்ளது.
இந்த துயர நிகழ்வுக்கு திரைப்பட ரசிகர்கள், திரைப் பிரபலங்களும், இதர திரையரங்க உரிமையாளர்களும் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக காசி திரையரங்க நிர்வாகம், ஊழியர்கள் தங்களின் ஆழ்ந்த வருத்தத்தை பதிவு செய்வதாக அறிவித்துள்ளது.
Also Read: 2வது Elimitation-ஐ அறிவித்த கமல்ஹாசன்! "இவங்க போறத தாங்க முடில" - கதறும் ரசிகர்கள்..