ஜெயில் படம் தியேட்டரில் திரையிட தடை..! பிரபல தயாரிப்பாளர் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஜி.வசந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் இசை மற்றும் நடிப்பில் உருவான திரைப்படம் 'ஜெயில்'. 

Advertising
>
Advertising

நேற்று உலகமெங்கும் இந்த படம் திரையரங்கில் வெளியானது. இப்படத்தை, க்ரிக்ஸ் சினி க்ரியேஷன் சார்பில் ஸ்ரீதரன் மரியதாசன் அவர்கள் தயாரித்துள்ளார். வெயில், அங்காடித் தெரு, அரவான்,காவியத்தலைவன் உள்ளிட்ட தரமான படங்களை இயக்கிய ஜி.வசந்தபாலன் தற்போது கதை எழுதி இயக்கியிருக்கும் படம் 'ஜெயில்'. இந்தத் திரைப்படத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் நாயகனாக நடிக்கிறார். தேன் திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான அபர்ணதி நாயகியாக நடித்துள்ளார்.

இவர்களுடன் ராதிகா சரத்குமார், 'பசங்க' பாண்டி, நந்தன் ராம் (இசையமைப்பாளர் சிற்பி அவர்களின் புதல்வன்), ரவி மரியா உள்ளிட்ட நட்சத்திரங்களுடன் ஏராளமான நவீன நாடக நடிகர்களும், புதுமுகங்களும் நடித்துள்ளனர். சண்டைக்காட்சிகளை அமைக்கும் பணியை தேசிய விருது பெற்ற அன்பறிவ் ஏற்றுள்ளனர். நடனக்காட்சிகளை சாண்டி,ராதிகா அமைத்துள்ளனர்.ஜிவி பிரகாஷ் குமாரின் இசையில் கபிலன்,சிநேகன் , கருணாகரன்,தெருக்குரல் அறிவு பாடல்களை எழுதியுள்ளனர்.

கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ஜீ வி பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். படத்தின் கதையை இயக்குநர் வசந்தபாலனுடன் இணைந்து எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணனும் வசனத்தை பாக்கியம் சங்கர் அவர்களும் எழுதியிருக்கிறார்கள். அனைத்து பணிகளும் நிறைவடைந்து, கொரோனா காரணமாக திட்டமிட்டபடி வெளியிட முடியாமல் தள்ளிவைக்கப்பட்ட இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் வெளியிடுவதாக முதலில் அறிவிக்கப்பட்டது. 

பின்னர் படத்தின் தயாரிப்பாளர் வேற நிறுவனத்துக்கு வெளியீட்டு உரிமையை விற்றதால் ஜெயில் திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக்கோரி ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தொடர்ந்த வழக்கில், படத்தின் தயாரிப்பு நிறுவனமான கிரெய்க்ஸ் சினி கிரியேசன்ஸ் நிறுவனத்துக்கு  OTT மற்றும் சாட்டிலைட்ல் கோர்ட் அனுமதி இல்லாமல் வெளியிடக்கூடாது என்று ஐகோர்ட் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி உத்தரவிட்டுள்ளார். மேலும் தியேட்டரில் திரையிடவும் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

Chennai High Court bans screening of Jail movie at theater

People looking for online information on ஐகோர்ட் நீதிபதி, ஜி.வி. பிரகாஷ், ஜெயில், ஜெயில் தடை, ஜெயில் படம், தீர்ப்பு, வசந்த பாலன், ஸ்டுடியோ கிரீன், G V Prakash, Jail will find this news story useful.