தமிழ் திரையுலகின் முன்னணி ஆக்ஷன் ஹீரோக்களுள் ஒருவர் நடிகர் விஷால். விஷால் நடித்த தமிழ் ஆக்ஷன் படங்களால் அவருக்கு ரசிகர் பட்டாளமும் ஏராளமாகவே உள்ளனர். கடைசியாக வீரமே வகை சூடும்,
இந்நிலையில் சென்னை மாத்தூரில் நடிகர் விஷால், இன்று 11 ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்து வைத்துள்ளார். அத்துடன் திருமணத்தின் போது 51 வகையான பொருட்கள் அடங்கிய சீர்வரிசையையும் நடிகர் விஷால், புதுமணமக்களுக்கு வழங்கினார்.
குறிப்பாக 3 மத முறையிலும் வழிபட்ட நடிகர் விஷால், மணமக்களுக்கு தாலியை தொட்டு கும்பிட்டு எடுத்து கொடுத்தார். பின்னர் 11 திருமண தம்பதிகளுடன் விஷால் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. இந்த திருமணத்துக்கு பின்பு செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய நடிகர் விஷால், பல்வேறு விஷயங்களை பகிர்ந்துகொண்டார். அதன்படி, நடிகர் சங்க கட்டடம் கட்டும் பணிகள் தொடங்கியதாகவும், வருவதாக தெரிவித்தார்.
முன்னதாக அண்மையில் காசிக்கு சென்ற விஷால், காசிக்கு சென்று திரும்பிய பின், காசியை புதுப்பித்ததற்காக பிரதமர் மோடிக்கு நன்றி சொல்லி ட்வீட் பதிவிட்டிருந்தார். அதற்கு பிரதமரும் மகிழ்ச்சி என பதிலளித்திருந்தார். இது குறித்து விஷாலிடம் கேட்கப்பட்டபோது, அதற்கு பதிலளித்த விஷால், “பிரதமருக்கு நன்றி தெரிவித்ததில் அரசியல் எதுவும் இல்லை” என்று தெரிவித்தார்.
அதாவது, தாஜ்மகாலைப் பார்க்கும் போது ஷாஜகானை நாம் நினைத்து வியப்பதுபோல், காசியை பார்த்த போது பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்க தோன்றியதாகவும், இந்த காரணத்தினால், ஒரு சாதாரண குடிமகனாக, தான் தன் மனதில் பட்டதையே குறிப்பிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.