"நம்புனதுக்கு கழுத்தறுத்துட்டாங்க.. காதல் தந்த பரிசு" - நடிகர் அர்ணவ் EXCLUSIVE பேட்டி..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த இந்த தொடர், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.  இதற்கு அடுத்தபடியாக, திவ்யா ஸ்ரீதர் நடித்து வந்த "மகராசி" தொடர், ரசிகர்கள் மத்தியில் அவரை பிரபலம் ஆக்கி இருந்தது.

Advertising
>
Advertising

இந்த சீரியலில் நாயகியாக நடித்துவந்த திவ்யா ஸ்ரீதர் பின்னர், தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் "செவ்வந்தி" எனும் தொடரில் முதன்மை கதாபாத்திரத்தில் திவ்யா ஸ்ரீதர் நடித்து வருகிறார்.

குறுகிய காலத்திலேயே "செவ்வந்தி" சீரியல், பார்வையாளர்கள் பலரது கவனத்தையும் ஈர்த்திருந்தது. இதனைத் தொடர்ந்து பிரபல சீரியல் நடிகரும், "கேளடி கண்மணி" தொடரில் தன்னுடன் இணைந்து நடித்திருந்தவருமான அர்ணவை திவ்யா ஸ்ரீதர் திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் ஒரு நாள் இன்ஸ்டாகிராமில் தான் கர்ப்பமாக இருப்பதை அறிவித்த நடிகை திவ்யா ஸ்ரீதர், “விரைவில் எங்கள் குழந்தையை நாங்கள் எதிர்பார்க்க உள்ளோம். காதலர்களாக, கணவன் மனைவியாக, பெற்றோர்களாக அன்புடன் இதனை பேணுவோம். எனக்கும், என் குடும்பத்திற்கும் நீங்கள் கொடுத்த அளவில்லாத அன்பிற்கும், ஆதரவிற்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்து கொள்கிறேன்" என குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் அதன் பின்னரே அர்ணவ் - திவ்யா ஸ்ரீதர் இருவருக்குமான பிரச்சனைகளால் இருவரும் பிரிந்தனர். இவர்களுக்குள் சட்ட ரீதியான சிக்கல்களும் உருவாகின. இவற்றை அடுத்து, அண்மையில் நடிகை திவ்யா ஸ்ரீதருக்கு பெண் குழந்தை பிறந்தது. இது குறித்து நடிகர் அர்ணவ் பிஹைண்ட்வுட்ஸில் அளித்த பிரத்தியேக பேட்டியில், “எனக்கு குழந்தை பிறந்தது தெரியும் கேள்விப்பட்டேன் வாழ்த்துக்கள் கூறினேன் அப்போது அவர் சூட்டிங்கில் இருப்பதாக கூறினார் ஆனால் நேரில் சென்று பார்க்கக்கூடிய எண்ணம் யாருக்குத்தான் தோன்றாது அந்த எண்ணம் தோன்றாமல் இல்லை. ஆனால் நான் எதுவுமே தவறு செய்யாமல் என் மீது குற்றம் சாட்டுகிறார்கள், எனவே என் குழந்தையை பார்க்க போகவே அச்சமாக இருக்கிறது” என தெரிவித்துள்ளார். 

மேலும் பேசியவர்,  பெண் குழந்தைகளுக்கு அப்பாக்களுக்கு இருக்கும் கனெக்ட் போல அப்பாக்களுக்கு பெண் குழந்தையை பார்க்க வேண்டும் என்கிற ஏக்கம் எப்படி இருக்கும் என்பது பற்றி பேசினார். அதன்படி, “இந்த விஷயம் தெரிந்த முதல் நாள் எதுவும் தோன்றவில்லை. ஆனால் அடுத்தடுத்த நாள் எனக்கு ஒரு உணர்வு தோன்றியது. ஏனென்றால் நான் ஊரில் இருக்கும் குழந்தைகளை எல்லாம் தூக்கி வைத்து கொஞ்சிக் கொண்டு இருந்தேன். ஒருவேளை என் குழந்தையை பார்க்கவோ, அழைத்துக்கொண்டு வளர்க்கவோ வாய்ப்பு கிடைத்தால், என் குழந்தையை மட்டும் அழைத்துக்கொண்டு வந்து பார்த்துக்கொள்வேன், ஏனென்றால் அது என் குழந்தை

தாயை தப்பு சொல்ல முடியாது. தாய் எப்போதும் கிரேட். ஆனால் தகப்பனுக்கு ஒரு பொறுப்பு இருக்கும். எவ்வளவோ கனவு கண்டோம். எல்லாமே கலைஞ்சிருச்சு. அட்லீஸ்ட் என் குழந்தையை வீடியோ காலில் காட்டினால் கூட மிகவும் சந்தோஷப்படுவேன்” என பேசினார். மேலும் பேசியவர், தன் வீட்டார் அனைவரையும் எதிர்த்து திவ்யா ஸ்ரீதரை திருமணம் செய்ததாகவும், ஆனால் அம்மா, அப்பா பேச்சை கேட்டிருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டதுடன், அதுதான் தனக்கு இன்றுவரை கஷ்டமாக இருக்கிறது என்றும் தெரிவித்தார். குறிப்பாக தன்னை நம்ப வைத்து கழுத்தறுத்துவிட்டதாகவும், அதுதான் காதல் தந்த பரிசு, பாடம் என்றும் அவர் பேசினார். அதற்கு நன்றியும் கூறினார்.

"நம்புனதுக்கு கழுத்தறுத்துட்டாங்க.. காதல் தந்த பரிசு" - நடிகர் அர்ணவ் EXCLUSIVE பேட்டி..! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Chellamma actor arnav interview செல்லம்மா நடிகர் அர்ணவ்

People looking for online information on Arnav, Divya Sridhar will find this news story useful.