தனி விமானத்தில் தளபதி 67 படக்குழு.. அப்போ ஷூட்டிங் இந்த ஊர்லயா? செம்ம

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஜய் & லோகேஷ் கனகராஜ் இணையும் தளபதி 67 படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு குறித்த தகவல் நமக்கு பிரத்யேகமாக கிடைத்துள்ளது. 

Advertising
>
Advertising

                             Images are subject to © copyright to their respective owners.

Also Read | திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கைக்குழந்தையுடன் சாமி தரிசனம் செய்த காஜல் அகர்வால்..!

நடிகர் விஜய் நடிப்பில் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிப்பில் தளபதி 67 என தற்காலிகமாக பெயர் சூட்டப்பட்டுள்ள புதிய படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். S.லலித்குமார் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் இணை தயாரிப்பாளராக ஜெகதீஷ் பழனிசாமி இணைந்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி 2ஆம் தேதி துவங்கியது.

Images are subject to © copyright to their respective owners.

ராக்ஸ்டார் அனிருத், தளபதி 67 படத்திற்காக நான்காவது முறையாக தளபதி விஜய்யுடன் கைகோர்த்துள்ளார். இந்த படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய,  படத்தொகுப்பை பிலோமின் ராஜூம், கலை இயக்குனராக N.சதீஷ்குமாரும், நடன இயக்கத்தை தினேஷ் மாஸ்டரும் மேற்கொள்கிறார்கள்.

Images are subject to © copyright to their respective owners.

இந்த படத்தின் வசனங்களை இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இயக்குனர் ரத்னகுமார் மற்றும் தீரஜ் வைத்தி ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர். சண்டை காட்சிகளை அன்பறிவ் மாஸ்டர்கள் இயக்க உள்ளனர். நிர்வாக தயாரிப்பாளராக ராம்குமார் பாலசுப்பிரமணியன் பொறுப்பேற்றுள்ளார்.

Images are subject to © copyright to their respective owners.

நேற்று இந்த படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் சென்னை, கொடைக்கானல் படப்பிடிப்பு முடிந்து தளபதி 67 படக்குழு தற்போது காஷ்மீர் செல்ல உள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. தனி சிறப்பு விமானத்தில் தளபதி 67 படக்குழு காஷ்மீர் படப்பிடிப்புக்கு செல்கிறது என்று நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Images are subject to © copyright to their respective owners.

இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.

Also Read | BOX OFFICE: ஐந்தே நாளில் இம்புட்டு கோடி வசூலா?.. பல சாதனைகளை படைத்த 'பதான்'.. வெறித்தனமான வசூல் வேட்டை!

தொடர்புடைய இணைப்புகள்

Charted flights for Thalapathy 67 crew to fly to Kashmir now sources

People looking for online information on Thalapathy 67, Thalapathy 67 updates will find this news story useful.