அதர்வா - பிரியா பவானி சங்கர் நடிக்கும் குருதி ஆட்டம்.. வெளியான ராதிகாவின் போஸ்டர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அதர்வா - பிரியா பவானி சங்கர் நடிக்கும்  குருதி ஆட்டம் படத்தில் இருந்து நடிகை ராதிகாவின் கதாபாத்திர போஸ்டர் வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | இரண்டு தேசிய விருதுகளை வென்ற சிவகார்த்திகேயனின் அடுத்த பட இயக்குனர்! முழு தகவல்

சுயாதீன திரைப்பட இயக்குனராக தமிழ் சினிமாவில் கடந்த 2017ஆம் ஆண்டு  ‘8 தோட்டாக்கள்’ என்ற படத்தை இயக்கினார் இயக்குனர் ஸ்ரீ கணேஷ். இப்படம் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இதனை தொடர்ந்து மதுரையை மையமாக வைத்து நடிகர் அதர்வா - நடிகை பிரியா பவானி சங்கர் நடிப்பில் 'குருதி ஆட்டம்' படத்தை இயக்கியுள்ளார் ஸ்ரீ கணேஷ்.  இப்படத்திற்கு, இசையமைப்பாளார் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் முன்னோட்டம் மற்றும் சிங்கிள் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.  இந்தப் படத்தை ராக் போர்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. கொரோனா காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிச்சென்றது. பின்னர் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 24,2021 அன்று இந்த படம் திரைக்கு வர இருந்தது.

பின்னர் மூன்றாம் அலை பரவலால் ரிலீஸ் தள்ளிப்போனது. இந்நிலையில் படக்குழு இந்த படத்தின் புதிய ரிலீஸ் தேதியை பிரத்யேக போஸ்டர் மூலம் அறிவித்துள்ளது. அதன் படி இந்த படம் ஆகஸ்ட் - 5 ஆம் நாள் ரிலீசாக உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

ராதிகா சரத்குமார் முக்கிய வேடத்தில் காந்திமதி எனும் கதாபாத்திரத்தில் இந்த படத்தில் நடித்துள்ளார்.  இந்த காந்திமதி கதாபாத்திரத்தின் இரண்டு கதாபாத்திர போஸ்டர்கள் தற்போது வெளியாகி உள்ளன.

ரத்தம் தெறிக்கும் பின்னணியில் கையில் துப்பாக்கியுடன் ராதிகா ஒரு போஸ்டரில் தோன்றியுள்ளார். இன்னொரு போஸ்டரில் மீனாட்சி அம்மன் கோயில் பின்னணியில் சாந்தமான தோற்றத்தில் தோன்றியுள்ளார்.

Also Read | சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை வென்ற 'வாரிசு' பட MUSIC DIRECTOR! அவரே போட்ட மாஸ் பதிவு!

தொடர்புடைய இணைப்புகள்

Character poster from Kuruthi Aattam Radhika as Gandhimathi.

People looking for online information on Atharvaa, Kuruthi Aattam, Priya Bhavani Shankar, Radhika will find this news story useful.