தலைவன் வடிவேலு சந்திரமுகியுடன் டான்ஸ் ஆடுவாரோ.. சந்திரமுகி-2 வைரல் BTS😊

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சந்திரமுகி-2 படத்தின் படப்பிடிப்பு தள புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

Advertising
>
Advertising

Images are subject to © copyright to their respective owners.

Also Read | ஶ்ரீதேவியுடன் எடுத்த கடைசி ஃபோட்டோ.. போனி கபூர் உருக்கமான பதிவு! 

நடிகர் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கும் 'சந்திரமுகி 2' படத்தின் படப்பிடிப்பு கடந்தாண்டு மைசூரில் பூஜையுடன் துவங்கியது. '

இப்படத்தினை 'சந்திரமுகி' படத்தின் முதல் பாகத்தை இயக்கிய இயக்குனர் பி வாசு இயக்குகிறார்.

'பாகுபலி', 'ஆர் ஆர் ஆர்' பட புகழ் இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணி இசையமைக்கிறார். தோட்டா பானு & தோட்டா தரணி கலை இயக்குனர் பொறுப்பை ஏற்க, ஆர். டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். சந்திரமுகி 2'  திரைப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தயாரிக்கிறார்.

Images are subject to © copyright to their respective owners.

ஹாரர் திரில்லர் ஜானரில் தயாராகும்  சந்திரமுகி 2 படத்தில் நடிகை ராதிகா, நடிகர் வடிவேலு,நடிகர் ரவி மரியா, மனோபாலா முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தில் பிரபல முன்னணி நடிகை கங்கனா ரனாவத் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

Images are subject to © copyright to their respective owners.

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத் நகரில் நடைபெற்று வருகிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா படத்தின் படப்பிடிப்பு தள புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.

Images are subject to © copyright to their respective owners.

"முழுசாக சந்திரமுகியாக 😲 மாறிய வடிவேலு, கட்டி அணைக்கும் ராகவா லாரன்ஸ்...!" என தலைப்பிட்டு புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். மேலும் இந்த படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read | சந்திரமுகி - 2 படத்தில் இணைந்த பிரபல மலையாள நடிகை.. அவரே வெளியிட்ட வைரல் போட்டோ!

Chandramukhi 2 Movie Latest BTS Images went viral on social media

People looking for online information on Chandramukhi 2, Chandramukhi 2 Movie Latest BTS Images will find this news story useful.