ராகவா லாரன்ஸ் நடிக்கும் சந்திரமுகி-2.. வடிவேலுவின் BTS வீடியோவுடன் வெளியான தெறி அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சந்திரமுகி-2 படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து BTS வீடியோ மற்றும் புகைப்படம் வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | குடும்பத்தோடு அமெரிக்காவில் சுற்றுலா சென்ற பூஜா ஹெக்டே.. அவரே வெளியிட்ட டூர் போட்டோஸ்!

நடிகர் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கும் 'சந்திரமுகி 2' படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன் மைசூரில் பூஜையுடன் துவங்கியது.

லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன்  'சந்திரமுகி 2'  திரைப்படத்தை தயாரிக்கிறார். இதனை 'சந்திரமுகி' படத்தின் முதல் பாகத்தை இயக்கிய இயக்குநர் பி வாசு இயக்குகிறார்.

இந்த படத்தின் கதாநாயகியாக பிரபல நடிகை லட்சுமி மேனன் நடிக்கிறார் என்று நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.  இப்படத்தில் நடிகை ராதிகா முக்கிய வேடத்தில் நடிக்கின்றார்.

ஹாரர் திரில்லர் ஜானரில் தயாராகும் இந்தப் படத்தின் முதற் கட்ட படப்பிடிப்பு மைசூரில் இன்றுடன் நிறைவு பெற்றது. இதனை படத்தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படத்தை பகிர்ந்து அறிவித்துள்ளது. நடிகர் ராகவா லாரன்ஸ் மற்றும் இயக்குனர் பி. வாசு பேசிக்கொண்டு இருப்பது போல அந்த புகைப்படம் அமைந்துள்ளது.

இந்த படப்பிடிப்பில் நடிகை ராதிகா & நடிகர் வடிவேலு மற்றும் ராகவா லாரன்ஸ் கலந்து கொண்டனர். படப்பிடிப்பு நடுவே வடிவேலு உடன் ராதிகா மற்றும் லாரன்ஸ் விளையாடும் வீடியோவை ராதிகா தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்து விட்டது என கூறியுள்ளார்.

லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தயாரிப்பில், அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜி. கே. எம். தமிழ் குமரன் மேற்பார்வையில்  ‘சந்திரமுகி 2’ படம் உருவாகிறது.

கலை இயக்குநர் பணிகளை தோட்டா தரணி கவனிக்கிறார். 'பாகுபலி', 'ஆர் ஆர் ஆர்' பட புகழ் இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணி இசையமைக்கிறார். தோட்டா பானு கலை இயக்குநர் பொறுப்பை ஏற்க, ஆர். டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார்.

 

Also Read | போடு வெடிய..பிரபல தமிழ் தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பாகும் KGF Chapter 2 திரைப்படம்! எதுல?

தொடர்புடைய இணைப்புகள்

Chandramukhi 2 Movie Latest BTS Image and Video Goes Viral

People looking for online information on Chandramukhi 2 Movie, Chandramukhi 2 Movie Updates, Raghava Lawrence will find this news story useful.