சந்திரமுகி-2 படம் பற்றிய BREAKING தகவல்கள் வெளியாகி உள்ளது.
மலையாளத்தில் 1993ம் ஆண்டு வெளியான 'மணிசித்ரதாலு' படத்தை இயக்குனர் ஃபாசில் இயக்கியிருந்தார். மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால், சுரேஷ் கோபி, நெடுமுடி வேணு, நடிகை ஷோபானா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
இந்த படத்தை இயக்குநர் பி.வாசு கன்னடத்தில் 'ஆப்தமித்ரா' என்ற பெயரில் 2004ல் ரீமேக் செய்தார். கன்னடத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்ய திட்டமிட்டார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
ரஜினிகாந்த் கேட்டுக்கொண்டதற்கு இணங்க 2005ம் ஆண்டு சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் சந்திரமுகி திரைப்படம் வெளியானது. தமிழ்நாட்டில் மட்டும் 890 நாட்கள் ஓடி இந்தப்படம் மிகப்பெரிய சாதனை படைத்தது.4
இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் ரஜினியுடன், வடிவேலு, பிரபு, ஜோதிகா, நயன்தாரா, நாசர் உள்ளிட்டோர் சந்திரமுகி படத்தில் நடித்திருந்தனர். வித்யாசாகர் இசையமைத்து இருந்தார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு, நடிகர் ராகவா லாரன்ஸ், சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் பி.வாசு இயக்கும் சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் நடிப்பதாக அறிவித்தார். அந்த அறிவிப்பில், ''நண்பர்களே நான் ஒரு முக்கியமான அறிவிப்பை இங்கு பகிர்ந்து கொள்கிறேன். எனது அடுத்த படம் தலைவர் ரஜினி நடித்த சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகம் ஆகும். தலைவரின் அனுமதியுடன் இத்திரைப்படத்தில் நடிப்பது எனக்கு அதிர்ஷ்டம். இப்படத்தை பி.வாசு இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் இத்திரைப்படத்தை தயாரிக்கிறார்கள்'' என லாரன்ஸ் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் சந்திரமுகி முதல் பாகத்தை இயக்கிய பி.வாசுவே, சந்திரமுகி-2 படத்தையும் இயக்கவுள்ளார். இத்திரைப்படத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்கிறார் என நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் சுபாஷ்கரன் தயாரிக்க உள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகலாம்.
இந்த படத்தின் அறிவிப்பு 2020 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டதிலிருந்து, ரசிகர்கள் முதல் பாகத்தில் நடித்த நடிகர்கள் இந்தப் படத்தில் மீண்டும் நடிப்பார்களா என்பதை அறிய மிகவும் ஆர்வமாக இருந்தனர். இருப்பினும், நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளிவரவில்லை.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8