BREAKING: ராகவா லாரன்ஸ் நடிக்கும் சந்திரமுகி-2.. மைசூர் படப்பிடிப்பின் வேற லெவல் அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சந்திரமுகி படத்தின் படப்பிடிப்பு குறித்த நம்பத்தகுந்த தகவல்கள் கிடைத்துள்ளன.

Advertising
>
Advertising

'சந்திரமுகி 2' படத்தைப் பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு சில மாதங்களுக்கு முன் வெளியானது. நடிகர் ராகவா லாரன்ஸ்  நடிக்கும் 'சந்திரமுகி 2' படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன் மைசூரில் பூஜையுடன் தொடங்கியிருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்கள்.

லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன்  'சந்திரமுகி 2'  திரைப்படத்தை தயாரிக்கிறார். இதனை 'சந்திரமுகி' படத்தின் முதல் பாகத்தை இயக்கிய இயக்குநர் பி வாசு இயக்குகிறார்.

இந்த படத்தின் கதாநாயகியாக பிரபல நடிகை லட்சுமி மேனன் நடிக்கிறார் என்று நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. குச்சுப்புடி நடன கலைஞரான லட்சுமி மேனன் சந்திரமுகி 2 படத்தில் நடிப்பதாக வரும் தகவல்கள்  ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தில் நடிகை ராதிகா முக்கிய வேடத்தில் நடிக்கின்றார்.

லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தயாரிப்பில், அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜி. கே. எம். தமிழ் குமரன் அவர்களின் மேற்பார்வையில் உருவாகவிருக்கும் ‘சந்திரமுகி 2’ படத்தின் தயாரிப்பு ஒருங்கிணைப்பு பணிகளை பிரபல கலை இயக்குநர் தோட்டா தரணி கவனிக்கிறார். 'பாகுபலி', 'ஆர் ஆர் ஆர்' பட புகழ் இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணி இசையமைக்கிறார். தோட்டா பானு கலை இயக்குநர் பொறுப்பை ஏற்க, ஆர். டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார்.

ஹாரர் திரில்லர் ஜானரில் தயாராகும் இந்தப் படத்தின் முதற் கட்ட படப்பிடிப்பு மைசூரில் தொடங்கியது. இந்த படப்பிடிப்பில் நடிகை ராதிகா & நடிகர் வடிவேலு மற்றும் ராகவா லாரன்ஸ் கலந்து கொண்டனர். இந்நிலையில் இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு இன்றுடன் மைசூரில் முடிந்து விட்டது என்றும் படக்குழு நாளை மைசூரில் இருந்து சென்னை திரும்புகிறது என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன

தொடர்புடைய இணைப்புகள்

Chandramukhi 2 1st schedule completed today in mysore

People looking for online information on Chandramukhi2, Lakshmi menon, P Vasu, Raghava Lawrance, Vadivelu will find this news story useful.