VIDEO: நம்ம கயல் சீரியல் சயித்ரா ரெட்டியை முகத்தில் குத்திய நடிகர் அவினாஷ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை: பிரபல கயல் சீரியல் நடிகை சயித்ரா ரெட்டியை நடிகர் அவினாஷ் முகத்தில் குத்திய வீடியோ வைரலாகி வருகிறது.

Advertising
>
Advertising

வலிமை படத்தில் நடிகை சயித்ரா ரெட்டி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சாயித்ரா ரெட்டி வலிமை திரைப்படத்தில் போலீஸாக வரும் அஜீத் மற்றும் நடிகை ஹூமா குரேஷியுடன் நடித்துள்ளார். இதில், குற்றவாளிகளை பிடிக்கும் குற்றவியல் பிரிவு போலீஸாரின் கட்டுப்பாட்டு அறையில் பணிபுரியும் பெண்ணாக சயித்ரா ரெட்டி நடித்துள்ளார். 

இயக்குனர் H. வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை படம் (24.02.2022) அன்று திரையரங்கில் வெளியாகி உள்ளது.  தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 4 மொழிகளிலும் ரிலீசாகி உள்ளது. விமர்சகர்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழகத்தில் மொத்தம் 607 திரையரங்குகளில் வலிமை படம் ரிலீசாகி உள்ளது. வலிமை படத்தை சினிமா பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். இரண்டு முறை  தேசிய விருது வென்ற தயாரிப்பாளர் BOFTA தனஞ்செயன், அருண் விஜய், வெங்கட் பிரபு, விக்னேஷ் சிவன் ஆகியோரும் வலிமை படத்தை பார்த்து கருத்து தெரிவித்துள்ளனர்.

இதுவரை இந்திய திரைப்படங்களில் அதிக ரசிகர்கள் பார்க்க ஆர்வம் காட்டும் படமாக BMS-ல் வலிமை படம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.வலிமை படத்தில் வில்லனாக கார்த்திகேயாவும், அஜித்திற்கு நண்பியாக ஹூமா குரேஷி, ராஜ் ஐயப்பா நடிக்க, கதிர் கலை இயக்குனராக பணியாற்றியுள்ளார். சண்டைக்காட்சி இயக்குனராக திலிப் சுப்பராயன் பணியாற்றியுள்ளார்.

நிரவ் ஷா ISC ஒளிப்பதிவு செய்ய, விஜய் வேலுக்குட்டி எடிட்டராக பணியாற்றியுள்ளார். இயக்குனர் எச். வினோத் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்க, யுவன் சங்கர் ராஜா உடன் ஜிப்ரான் இசையமைத்துள்ளார். போனி கபூருடன் இணைந்து ஜி ஸ்டூடியோஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது.

நடிகை சயித்ரா ரெட்டி, முன்னதாக ஜீ தமிழில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி திரைப்படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் இருக்கும் நிலையில் இவர் தற்போது கயல் எனும் சன் டி.வி சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார். 

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை சயித்ரா ரெட்டி, புகைப்படங்கள், வீடியோ, கேள்வி பதில், ரசிகர்களுடன் அரட்டை என படு டிரெண்டாக இருப்பார். இந்நிலையில் நடிகர் அவினாஷ் உடன் செல்பி வீடியோ எடுக்க முயற்சிக்கும் போது அவினாசின் முழங்கை சயித்ரா ரெட்டியின் மூஞ்சியில் பட்டுவிட நிலைத்தடுமாறி விட்டார். இந்த வீடியோவை தற்போது நடிகை சயித்ரா ரெட்டி வெளியிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Chaitra reddy Avinash Selfie Trend really went wrong

People looking for online information on Avinash, வலிமை, Chaitra Reddy, Kayal, Selfie, Valimai will find this news story useful.