தியேட்டர்களை மீண்டும் திறப்பது பற்றி மத்திய அமைச்சகம் முக்கியமான தகவல் வெளியிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் ஊரடங்கின் காரணமாக, கடந்த 4 மாதங்களுக்கு மேலாக சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டு உள்ளன. இதனால் சினிமாத்துறைச் சார்ந்த வியாபாரங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே தற்போது சீனா உள்ளிட்ட சில நாடுகளில், சமூக இடைவெளியை கடைபிடித்து, சினிமா தியேட்டர்கள் இயங்க தொடங்கி இருக்கின்றன.
இந்நிலையில் மீண்டும் தியேட்டர்கள் திறக்கப்படுவது குறித்து மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் சார்பில் ஆலோசிக்கப்பட்டது. இதில் ஆகஸ்ட் 1 முதல் 31-ஆம் தேதிக்குள் தியேட்டர்கள் திறப்பது குறித்து பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா வைரஸ் பாதுகாப்புடன் தியேட்டர்களை இயக்குவது குறித்தும், அதற்கான கட்டுப்பாடுகள் மற்றும் திரையரங்க உரிமையாளர்களின் தரப்பில் இருக்கும் கருத்துக்களும் கலந்தாலோசிக்கப்பட்டன. இதையடுத்து இதுகுறித்து இறுதி முடிவு எடுக்கப்பட்டு, அறிவிப்பை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.