'குழந்தை பிறக்கும் முன் இறந்து போன சோகம்' - பிரபல ஜோடி கண்ணீர் தகவல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல ஜோடி வெளியிட்டுள்ள சோகமான தகவல் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. 

இந்த 2020-ஆம் வருடம் பல்வேறு இழப்புகளை நாம் பார்த்து வருகிறோம். கொரோனா வைரஸ் காரணத்தால், பல்வேறு மக்கள் தொடர்ந்து உயிரிழந்து வருவது ஒருபக்கம் இருக்க, வேறு பல காரணங்களால் சுஷாந்த் சிங், மருத்துவர் சேது, காமெடியன் வடிவேல் பாலாஜி, பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோர் காலமானது ரசிகர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தற்போது பிரபல ஜோடி வெளியிட்டுள்ள கண்ணீர் தகவல் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹாலிவுட்டில் பிரபலமான ஜான் லெஜன்ட் - க்ரிஸி டீகன் இருவரும், அண்மையில் தங்களுக்கு மூன்றாவது குழந்தை பிறக்க போவது குறித்து அறிவித்தனர். இந்நிலையில் தற்போது குழந்தை பிறக்கும் முன்னரே இறந்து போன தகவலை கண்ணீருடன் இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார் க்ரிஸி. மேலும் வயிற்றில் இருந்த போதே குழந்தைக்கு ஜாக் என பெயர் வைத்துவிட்டதாகவும், ஜாக் எப்போதும் எங்கள் குடும்பத்தில் ஒருவன்தான் எனவும் உருக்கமாக தெரிவித்துள்ளார் அவர். 

 

பிரபல ஜோடி கண்ணீர் தகவல் | Celebrity couples loses their third child before birth

People looking for online information on Crissy Teigan, John Legend will find this news story useful.