தளபதி விஜய்யின் தெறி டான்ஸ்.. வெளியான CELEBRATION OF VARISU வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஜய் நடிப்பில் வாரிசு திரைப்படம் நேற்று முன்தினம் (11.01.2023) வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | இந்த வாரம் பிரபல OTT- களில் ரிலீஸாகும் முக்கிய திரைப்படங்கள் & வெப் சீரிஸ்.. முழு தகவல்!

தளபதி விஜய்யின் நடிப்பில் இயக்குனர் வம்சி பைடிபள்ளி  'வாரிசு' படத்தை இயக்கியுள்ளார்.

நடிகர் விஜய், ராஷ்மிகா, பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா, கணேஷ் வெங்கட்ராமன் எனப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு, ஹரி மற்றும் ஆஷிஷோர் சாலமன், விவேக் இணைந்து கதை & கூடுதல் திரைக்கதை எழுதி உள்ளனர். இசையமைப்பாளர்  எஸ் தமன் இசையமைத்துள்ளார். கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்துள்ளார். கே எல் பிரவீன் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.

தமிழ் & தெலுங்கு என இரு மொழிகளில் உருவான இந்த படம் தெலுங்கில் நாளை ஜனவரி மாதம் 14 ஆம் தேதி திரையரங்குகளில்   வெளியாகும் என  அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் வெளியான தமிழ் பதிப்பு வாரிசு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நேற்று  முன்தினம் அதிகாலை 4 மணி முதல் வாரிசு திரைப்படம் திரையிடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் வாரிசு படத்தில் இருந்து Celebration of Varisu என்ற தலைப்பில் படத்தில் இடம்பெற்ற கொண்டாட்ட பாடல் லிரிக் வீடியோ வடிவில் வெளியாகி உள்ளது. தமன் இசையில் ஷோபி நடன அமைப்பில் நடிகர் விஜய் ஆடும் நடனமும் இந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளது.

மேலும் ராஷ்மிகா, ஜெயசுதா, சரத்குமார், பிரபு, ஷாம் ஆகியோர் இந்த வீடியோவில் தோன்றியுள்ளனர்.

Also Read | “FIRST துணிவு -ல நடிக்க முடியாம போச்சு... எனக்காக கருமாரி அம்மன் கோயிலுக்கு போயி வேண்டினாங்க” - வில்லன் நடிகர்‌ ஜான் கொக்கன் சுவாரஸ்ய தகவல். EXCLUSIVE

தொடர்புடைய இணைப்புகள்

Celebration of Varisu Vijay Rashmika Mandanna Lyric video

People looking for online information on Rashmika Mandanna, Rashmika Mandanna Lyric video, Varisu, Varisu Vijay, Vijay will find this news story useful.