CBI சேதுராமய்யராக மீண்டும் களமிறங்கிய மம்மூட்டி.. இவருக்கு வயசே ஆகாதா..ரசிகர்கள் உற்சாகம்..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மம்மூட்டி நடிப்பில் வெளிவரவிருக்கும் CBI 5 THE BRAIN படத்தின் போஸ்டரை, மம்மூட்டி தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Advertising
>
Advertising

VIDEO: புஷ்பா-ல சமந்தா.. இப்போ தமன்னா... செம ஹாட் குத்து SONG-க்கு வேற லெவல் டான்ஸ்!

CBI சேதுராமய்யர்

1988ஆம் ஆண்டு மம்மூட்டி நடிப்பில் வெளியான ஒரு சிபிஐயின் டைரிக்குறிப்பு. S. N. Swamy எழுத்தில் K. Madhu இயக்கத்தில் வெளியான இத்திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் பிறகு இந்த வெற்றி கூட்டணி ஜாக்ரதா, சேதுராமய்யர் CBI, நேரரியன் CBI, என நான்கு முறை இணைந்துள்ளது.  CBI சேதுராமய்யர் (மம்மூட்டி) குற்றங்களை ஆராய்ந்து தீர்ப்பதே இத்திரைப்படத்தின் மூலக்கரு ஆகும். இந்த நான்கு திரைப்படத்திற்கும் Shyam இசையமைத்திருந்தார்.

CBI 5 THE BRAIN

தற்போது இந்த கூட்டணி ஐந்தாவது முறையாக மீண்டும் இணைந்துள்ளது. S. N. Swamy எழுத்தில் K. Madhu இயக்குகிறார். சென்ற நான்கு படங்களுக்கு Shyam இசையமைத்திருந்த நிலையில் தற்போது ஐந்தாம் பாகத்திற்கு Jakes Bejoy இசையமைக்கிறார். மற்ற படங்களில் உள்ள மிகவும் பிரபலமான சிபிஐ தீம் மியூசிக் இதிலும் பயன்படுத்தி இருக்கிறார்கள்.

இப்படத்தில் ரஞ்சி பணிக்கர், அனூப் மேனன், சாய்குமார், சௌபின் ஷாஹிர், திலீஷ் போத்தன், பிரசாந்த் அலெக்சாண்டர், ரமேஷ் பிஷாரடி, ஜெயகிருஷ்ணன், சுதேவ் நாயர், அஜீஸ் நெடுமங்காட், சந்தோஷ் கீழாத்தூர், எடவேல பாபு, கோட்டயம் ரமேஷ், முகேஷ், சுரேஷ் குமார், தந்தூர் கிருஷ்ணன், ராஜன், அன்சிபா ஹாசன், மாளவிகா மேனன், மாளவிகா நாயர், ஸ்வாசிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஸ்வர்கசித்ரா தயாரிப்பு நிறுவனத்தின் அப்பச்சன் இந்த படத்தை தயாரிக்கிறார். ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் பணிகளை கையாள்கிறார்.

தற்போது இந்த படத்தின் போஸ்டர்கள் ரிலீஸாகி ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கைகளை பின்னே கட்டிக்கொண்டு மம்மூட்டி நிற்கும் படத்தை பார்த்த ரசிகர்கள் அதே போல் உள்ள மற்ற பாகங்களின் படங்களை ஒப்பிட்டு மம்மூட்டிக்கு வயது ஆகவே இல்லை என்று கொண்டாடி வருகின்றனர்.

மாலத்தீவில் கடைசி நாள்.. ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த செம HOT திவ்யபாரதி!

தொடர்புடைய இணைப்புகள்

CBI SethuramaIyer is back with bang Fans goes crazy

People looking for online information on CBI SethuramaIyer, K Madhu, Mammootty, Navya Nair will find this news story useful.