துல்கர் - மிருணாள் - ராஷ்மிகா நடிக்கும் சீதா ராமம்.. சென்சார் போர்டு கொடுத்த சர்டிபிகேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

துல்கர் சல்மான் நடிக்கும் 'சீதா ராமம்' படத்தின் சென்சார் போர்டு கொடுத்த சர்டிபிகேட் விவரம் வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | சரஸ்வதி தேவி முன் தனுஷ்.. பிறந்தநாளில் ரிலீசான 'வாத்தி' போஸ்டர்! செம்ம கெத்து

மலையாள சினிமாவில் மட்டுமல்லாமல் தென்னிந்திய சினிமா திரை உலகில் முன்னணி நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் துல்கர் சல்மான்.

இவர் தெலுங்கின் முன்னணி இயக்குநரான ஹனு ராகவபுடி இயக்கத்தில் தயாராகி இருக்கும் 'சீதா ராமம்' எனும் படத்தில் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை மிருணாள் தாகூர் நடித்திருக்கிறார்.

இந்த திரைப்படத்தில் நடிகை ரஷ்மிகா மந்தானா அழுத்தமான வேடத்தில் நடித்துள்ளார். பி எஸ் வினோத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்திருக்கிறார் கூடுதல் ஒளிப்பதிவை ஸ்ரேயாஸ் கிருஷ்ணா செய்துள்ளார்.

1960களில் போர்க்கள பின்னணியில் காதலை மையப்படுத்திய இந்த திரைப்படத்தை வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சி அஸ்வினி தத் வழங்குகிறார். இதனை ஸ்வப்னா சினிமா எனும் நிறுவனம் தயாரித்திருக்கிறது. 

இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை பிரபல முன்னணி தயாரிப்பு நிறுவனமான சுபாஸ்கரனின்  லைக்கா புரொடக்ஷன்ஸ்   நிறுவனம் கைப்பற்றியுள்ளது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

துல்கர் சல்மான், மிருணாள் தாகூர், ரஷ்மிகா மந்தானா, கௌதம் மேனன், பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடித்திருப்பதால் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் 'சீதா ராமம்' திரைப்படம் ஆகஸ்ட் 5ஆம் தேதியன்று தெலுங்கு, இந்தி, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

இந்நிலையில் இந்திய அரசின் சென்சார் போர்டு 'சீதா ராமம்'   படத்திற்கு 'யு' சான்றிதழ் வழங்கியுள்ளது. இதனை படக்குழு அதிகாரப்பூர்வமாக துல்கர் சல்மானின்  பிறந்தநாள் வாழ்த்துகள் போஸ்டர் மூலம் அறிவித்துள்ளது.

Also Read | அஜித்தை பார்க்க கைக்குழந்தையுடன் காத்திருந்த பெண்.. அஜித்தின் செயலால் நெகிழ்ச்சி!

தொடர்புடைய இணைப்புகள்

CBFC Sita Ramam Movie Censored U Certificate

People looking for online information on Dulquer salmaan, Mrunal Thakur, Rashmika Mandanna, Sita Ramam, Sita Ramam Movie Updates will find this news story useful.