பழைய நினைவுகளை அசைபோட யாருக்கு தான் பிடிக்காது. அதிலும் 80ஸ் மற்றும் 90ஸ் கிட்ஸின் பால்ய வாழ்க்கை அனுபவங்களை அவர்கள் நிறையவே மிஸ் பண்ணுகின்றனர்.
அதில் முக்கியமானவை பாட்டு புத்தகங்களும், ஆடியோ கேஸட்டுகளும் என்பது மறுக்க முடியாதது. இன்று அவை இரண்டுமே தொலைந்து போய்விட்டன. ஆனாலும் அந்த கேஸட்டின் ஒலிநாடாவில் இருந்து வந்த இசையில் தான் அத்தனை பாடல்களும் அப்போது கேட்கப்பட்டன. அவற்றை மீண்டும் இப்போது அதே மாதிரி கேஸட்டுகளில் கேட்டால் எப்படி இருக்கும்?
ஆம், அந்த நாஸ்டால்ஜியாவை அனுபவிக்க தயாராகும் நேரம் வந்துவிட்டது. மோகன்லால் மகன் நடிக்கும், ‘ஹிருதயம்’ எனும் மலையாள படத்தின் தயாரிப்பாளர்கள் ஆடியோ கேஸட்டுகள் மூலம், இப்படத்தின் இசையைக் கேட்கும் பொற்காலத்தை மீண்டும் கொண்டு வரவிருக்கின்றனர்.
இயக்குநர் வினீத் சீனிவாசன் இயக்கியுள்ள திரைப்படம் ‘ஹிருதயம்’. மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலின் மகன் பிரணவ் மற்றும் இயக்குநர் ப்ரியதர்ஷனின் மகள் கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் இந்த படத்தில் Lead-ஆக நடிக்கின்றனர்.
விசாக் சுப்பிரமணியம் தயாரிப்பில், நோபல் பாபு தாமஸ் இணை தயாரிப்பில், உருவாகியுள்ள இந்த படத்தின் ஆடியோ உரிமைகளை திங்க் மியூசிக் கைப்பற்றியுள்ளது.
இதுபற்றிய ஒரு மகிழ்ச்சியான ட்வீட்டினை நடிகர் மோகன்லால் பதிவு செய்துள்ளார். அதில், “ஹிருதயம்-உடன் திங்க் மியூசிக் இந்தியா இணைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம்! #BringingCassettesBack” என குறிப்பிட்டுள்ளார்.
ALSO READ: அதிர்ச்சி மரணம்!.. பிரபல "மண்வாசனை" தொடரில் நடித்த பழம்பெரும் திரைப்பட நடிகை காலமானார்!