49 வயசு மனிதரின் காதல்... CARE OF காதல் படத்தின் மீது எகிறும் எதிர்பார்ப்பு.. ரிலீஸ் தேதி இதுதான்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிப்ரவரி 12-ஆம் தேதி தியேட்டர்களில் ரிலீஸ் ஆக இருக்கும் கேர் ஆப் காதல் (Care of Kaadhal) படம் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. காரணம் தெலுங்கில் வெற்றி பெற்ற ஹிட்  படமான 'சி/ஓ காஞ்சரபாலம்' படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் தான் இது. ஹேமம்பர் ஜஸ்தி இயக்கியுள்ள இப்படத்தில் தீபன், வெற்றி, மும்தாஜ் சோர்கர், ஐரா, கார்த்திக் ரத்னம், சோனியா கிரி, நிஷாஷ், ஸ்வேதா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஸ்ரீ ஷிர்டி சாய் மூவிஸ் மற்றும் பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் பேனர்ஸ் இந்த படத்தை இணைந்து தயாரித்துள்ள நிலையில் இப்படத்தின் விளம்பரங்களும் பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

இந்த படத்திற்கு ஸ்வீக்கர் அகஸ்தி இசையமைக்கிறார். படத்தின் கதை என்னவென்றால் வயது, ஜாதி, மதம் போன்ற வேறுபாடுகளை கலைந்து  4 காதல் ஜோடிகள் தங்கள் காதலில் வெற்றி பெற்றார்களா என்பதுதான் கதை. கிளைமாக்ஸில் இருக்கப்போகும் டுவிஸ்ட்டை படம் பார்க்கும் ரசிகர்கள் நிச்சயம் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள் என்றே சொல்லலாம். தெலுங்கில் அந்த கிராமத்தை அழகுற காட்டியிருக்கும் விதத்தில் அப்படி மிரட்டியிருப்பார்கள். அற்புதமான மேக்கிங் மற்றும் சூப்பர் பீல் குட் படமாக ரசிகர்களை கவர்ந்தது சி/ஓ காஞ்சரபாலம்.

சமுதாயத்தில் வெவ்வேறு பொருளாதார நிலைகளில் இருக்கும் மனிதர்கள் காதல் வயப்படும் பொழுது ஏற்படும் விளைவுகளையும் இந்த படம் விவரிக்கின்றது. குறிப்பாக 49 வயதான ஒரு மனிதர் தனது காதலில் வெற்றி பெற்றாரா இல்லையா, அவரது காதலை இந்த சமூகம் எப்படிப் பார்க்கிறது, வயதானவர்களின் காதல் எத்தகைய முதிர்ச்சி தன்மையுடன் இருக்கிறது போன்ற பல விஷயங்களை இந்த படம் அழகாக பேசுகிறது.

இந்நிலையில் பிப்ரவரி 14-ஆம் தேதி காதலர் தினம் கொண்டாடப்படும் நிலையில், காதலர் தின ஸ்பெஷலாக படம் தமிழில் தியேட்டர்களில் ரிலீசாக இருக்கிறது. மேலும் படக்குழுவினர் ஒரு புரோமோவையும் தற்போது வெளியிட்டுள்ளனர். இந்த புரோமோவை பார்க்கும் பொழுதே 'சில்லுக்கருப்பட்டி'க்கு பிறகு இந்த படம் Feel Good படம் நிச்சயம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெரும் என்றே கூறலாம்.

Care of Kadhal to hit theatres from feb 12 Care Of காதல் ரிலீஸ் தேதி இதுதான்

People looking for online information on Care Of Kaadhal, CO Kancharapalem will find this news story useful.