நடிகரும், முன்னாள் சட்டசபை எதிர்க்கட்சித்தலைவருமான நடிகர் விஜயகாந்த் தேமுதிக கட்சியின் நிறுவன தலைவராகவும் உள்ளார்.
Also Read | ராகவா லாரன்ஸ் - பிரியா பவானி சங்கர் நடிக்கும் புதிய படம்! First Look எப்போ? தெறி அப்டேட்
சில ஆண்டுகளுக்கு முன்பு 2014ல் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நடிகர் விஜயகாந்த் அதற்காக சிங்கப்பூரில் சிகிச்சை எடுத்துக்கொண்டார். சிங்கப்பூரில் உள்ள குயின் எலிசபெத் மருத்துவமனையில் அவருக்காக பிரத்தியேக சிகிச்சை அளிக்கப்பட்டது. தைராய்டு சுரப்பி பிரச்சினை, தொண்டையில் தொற்று, சிறுநீரக கோளாறு உள்ளிட்டவற்றுக்கு அங்கு சிகிச்சை எடுத்துக் கொண்டதாக தகவல்கள் தெரிவித்தன.
பின்னர் 2017-2018ல் மீண்டும் சென்னை, சிங்கப்பூர், அமெரிக்காவில் தொடர் சிகிச்சை எடுத்துக்கொண்டார். இந்த சிகிச்சையின் அடுத்த கட்டமாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் 30-ஆம் தேதி விஜயகாந்த் துபாய் வழியாக அமெரிக்கா சென்றார். அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று மீண்டும் தமிழகம் வந்தார்.
தீவிர அரசியல் மற்றும் உடல்நிலை காரணமாக 2010க்கு பின் சினிமாவில் நடிக்காமல் இருந்தார். கடைசியாக சகாப்தம் படத்தில் கேமியோ ரோலில் நடித்தார். கதாநாயகனாகவும் இயக்குனராகவும் கடைசியாக 2010ல் விருதகிரி படத்தில் காணப்பட்டார்.
இந்நிலையில் தேமுதிக கட்சி சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், "நீண்ட வருடங்களாக இருக்கும் நீரிழிவு பிரச்சனையால் தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்தின் வலது காலில் உள்ள விரல் பகுதியில் ரத்த ஓட்டம் சீராக இல்லாததால் மருத்துவர்களின் ஆலோசனைப்படி நேற்று விரல் அகற்றப்பட்டது. மருத்துவர்கள் கண்காணிப்பில் தற்போது அவர் நலமுடன் இருக்கிறார். மேலும் மருத்துவர்களின் ஆலோசனைப்படி தொடர்ந்து கேப்டனுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சை முடிந்து ஓரிரு நாட்களில் கேப்டன் விஜயகாந்த் வீடு திரும்புவார். மேலும் கேப்டன் உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் பரவும் பொய்யான வதந்திகளை கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம்." என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
1990-ல் பிரேமலதாவை மணந்த இவருக்கு விஜய் பிரபாகர், சண்முக பாண்டியன் என இரு மகன்கள் உள்ளனர்.
Also Read | ஆஹா..நஸ்ரியாவின் "லீலா" கேரக்டர் போட்டோ ஷூட்.. வெளியான சூப்பர் புகைப்படங்கள்!