உலக அளவில் சாமான்யர்கள், பிரபலங்கள் என மக்கள் அனைவரையும் கொரோனா வைரஸ் ஆரோக்கிய ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் மிகவும் பாதித்துள்ளது. கடந்த சில மாதங்களாக திரையுலகினர் தொடர்ச்சியாக கொரோனாவால் பாதிக்கப்படுவது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வகையில் ரசிகர்களால் கேப்டன் என அன்போடு அழைக்கப்படும் நடிகரும் தேமுதிக நிறுவனத் தலைவருமான விஜயகாந்த் கொரோனா பாதிப்பு இருப்பதாக தகவல் பரவியது. இதனையடுத்து தேமுதிக கட்சி சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், அவர் 6 மாதத்திற்கு ஒருமுறை பரிசோதனைக்காக மருத்துவமனை சென்றுள்ளாராம். அப்போது அவருக்கு லேசானா கொரோனா வைரஸ் அறிகுறிகள் தென்பட்டதாகவும், உடனடியாக அவை சரிசெய்யப்பட்டதாகவும் கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் தேமுதிக நிறுவனத் தலைவர் மற்றும் கழக பொதுச்செயலாளருமான திரு.விஜயகாந்த்திற்கு கோவிட்-19 சோதனையில் கொரோனா தொற்று இருப்பது கடந்த 22 ஆம் தேதி உறுதி செய்யப்பட்டது. தற்போது அவர் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் அவரது உடல் நிலை சீராக உள்ளது. அவர் கூடிய விரைவில் முழுமையாக குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு தரும்புவார் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். என்று குறிப்பிடப்பட்டுள்ளது.