குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடி பட்டாசு வெடித்த கேப்டன் விஜயகாந்த்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கேப்டன் விஜயகாந்த் தனது குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடிய புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

Captain Vijayakanth Diwali Celebration with His family
Advertising
>
Advertising


நடிகரும்,  முன்னாள் சட்டசபை எதிர்க்கட்சித்தலைவருமான நடிகர் விஜயகாந்த் தேமுதிக கட்சியின் நிறுவன தலைவராகவும் உள்ளார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு 2014ல் உடல் நலக்குறைவால் நடிகர் விஜயகாந்த் அதற்காக சிங்கப்பூரில் சிகிச்சை எடுத்துக்கொண்டார். சிங்கப்பூரில் உள்ள குயின் எலிசபெத் மருத்துவமனையில் அவருக்காக பிரத்தியேக சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் 2017-2018ல் மீண்டும் சென்னை, சிங்கப்பூர், அமெரிக்காவில் தொடர் சிகிச்சை எடுத்துக்கொண்டு நலமடைநதார். இந்த சிகிச்சையின் அடுத்த கட்டமாக கடந்த ஆண்டு ஆண்டு ஆகஸ்ட் மாதம் விஜயகாந்த் துபாய் வழியாக அமெரிக்கா சென்றார்.

அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று மீண்டும் தமிழகம் வந்தார். சமீபத்தில் கேப்டன் விஜயகாந்த், நீரிழிவு சிகிச்சை எடுத்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

தீவிர அரசியல் மற்றும் உடல்நிலை காரணமாக 2010க்கு பின் சினிமாவில் நடிக்காமல் இருந்தார். கடைசியாக சகாப்தம் படத்தில் கேமியோ ரோலில் நடித்தார். கதாநாயகனாகவும் இயக்குனராகவும் கடைசியாக 2010ல் விருதகிரி படத்தில் காணப்பட்டார்.

1990-ல் பிரேமலதாவை மணந்த இவருக்கு விஜய் பிரபாகர், சண்முக பாண்டியன் என இரு மகன்கள் உள்ளனர்.

சமீபத்தில் கேப்டன் விஜயகாந்தின் புதிய லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகின.  அதில் குடும்பத்தினர் உடன் விஜயகாந்த் தோன்றி இருந்தார். அந்த போட்டோக்கள் விஜயகாந்த் ரசிகர்கள் மத்தியில் வைரலாகின.

இந்நிலையில் கேப்டன் விஜயகாந்த், தனது குடும்பத்துடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடிய புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. புத்தாடை அணிந்து மத்தாப்பு வெடித்து தீபாவளி பண்டிகையை கொண்டாடிய புகைப்படங்கள் வெளியாகி தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Captain Vijayakanth Diwali Celebration with His family

People looking for online information on Captain Vijayakanth, Deepavali, Diwali, Vijayakanth will find this news story useful.