நடிகரும், முன்னாள் சட்டசபை எதிர்க்கட்சித்தலைவருமான நடிகர் விஜயகாந்த் தேமுதிக கட்சியின் நிறுவன தலைவராகவும் உள்ளார்.

Thalapathy66 : விஜய்யுடன் நடிக்க போகும் சூப்பர் ஹீரோ.. இந்த காம்பினேஷன் பட்டைய கிளப்பும்!
சில ஆண்டுகளுக்கு முன்பு 2014ல் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நடிகர் விஜயகாந்த் அதற்காக சிங்கப்பூரில் சிகிச்சை எடுத்துக்கொண்டார். சிங்கப்பூரில் உள்ள குயின் எலிசபெத் மருத்துவமனையில் அவருக்காக பிரத்தியேக சிகிச்சை அளிக்கப்பட்டது. தைராய்டு சுரப்பி பிரச்சினை, தொண்டையில் தொற்று, சிறுநீரக கோளாறு உள்ளிட்டவற்றுக்கு அங்கு சிகிச்சை எடுத்துக் கொண்டதாக தகவல்கள் தெரிவித்தன.
பின்னர் 2017-2018ல் மீண்டும் சென்னை, சிங்கப்பூர், அமெரிக்காவில் தொடர் சிகிச்சை எடுத்துக்கொண்டார். இந்த சிகிச்சையின் அடுத்த கட்டமாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் 30-ஆம் தேதி விஜயகாந்த் துபாய் வழியாக அமெரிக்கா சென்றார். அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று மீண்டும் தமிழகம் வந்தார். தீவிர அரசியல் மற்றும் உடல்நிலை காரணமாக 2010க்கு பின் சினிமாவில் நடிக்காமல் இருந்தார். கடைசியாக சகாப்தம் படத்தில் கேமியோ ரோலில் நடித்தார். கதாநாயகனாகவும் இயக்குனராகவும் கடைசியாக 2010ல் விருதகிரி படத்தில் காணப்பட்டார்.
சமீபத்தில் கேப்டன் விஜயகாந்தின் புதிய லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகின. அதில் குடும்பத்தினர் உடன் விஜயகாந்த் தோன்றி இருந்தார். இந்த போட்டோக்கள் விஜயகாந்த் ரசிகர்கள் மத்தியில் வைரலாகின.
இந்நிலையில் விஜயகாந்தின் புதிய புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. இந்த போட்டோக்களை விஜயகாந்த் டிவிட்டரில் பகிர்ந்து உள்ளார். அதில், " இன்று எனது இளைய மகன் சண்முகப்பாண்டியனின் பிறந்தநாளில், அவரை வாழ்த்திய போது" என குறிப்பிடப்பட்டுள்ளார்.
Thalapathy66 : விஜய் - வம்சியுடன் மீண்டும் இணைந்த தமிழ் சினிமாவின் பிரபல MOST WANTED எடிட்டர்!