CAPTAIN MILLER : தனுஷா இது? ஏர்போர்ட்ல சைலண்ட்டா கொடுத்த போஸ்.. அடுத்த சம்பவத்துக்கு ஆயத்தம்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'கேப்டன் மில்லர்' திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் தனுஷின் புதிய போட்டோவை வெளியிட்டுள்ளது.

Advertising
>
Advertising

Images are subject to © copyright to their respective owners.

Also Read | பிரபாஸ் - KGF பிரஷாந்த் நீல் இணையும் 'சலார்'.. செம அப்டேட் கொடுத்த ஸ்ருதிஹாசன்..!

நடிகர் தனுஷ் நடிப்பில், சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம்  ‘கேப்டன் மில்லர்’ படத்தினை தயாரிக்கிறது. ‘ராக்கி’, ‘சாணி காயிதம்’ படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இந்த கேப்டன் மில்லர் திரைப்படத்தினை இயக்கி வருகிறார்.

கேப்டன் மில்லர்  படத்தினை சத்யஜோதி பிலிம்ஸ் T.G.தியாகராஜன் வழங்குகிறார். செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜூன் தியாகராஜன் தயாரிக்கின்றனர். இப்படத்தை G.சரவணன் மற்றும் சாய் சித்தார்த் இணை தயாரிப்பு செய்கின்றனர்.

இப்படம் 1930கள்-40களின் பின்னணியில்  பீரியட் படமாக உருவாகிறது, மேலும் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் இப்படம் வெளியாகவுள்ளது.

இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். ஜான் கொக்கன், சந்தீப் கிஷன், நிவேதிதா  ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளனர். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல கன்னட சூப்பர் ஸ்டார் சிவ ராஜ்குமார் நடிக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த அக்டோபர் மாதம் 7 ஆம் தேதி முதல் தென்காசி மாவட்டத்தில் துவங்கியது.  இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

Images are subject to © copyright to their respective owners.

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இப்படத்துக்கு இசையமைக்கிறார். ஒளிப்பதிவாளர் ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார், எடிட்டர் நாகூரன் எடிட்டிங் பணிகளை மேற்கொள்ள, த.ராமலிங்கம் கலை இயக்குனராக பணிபுரிய உள்ளார்.  மாஸ்டர் திலீப் சுப்பராயன், சண்டை காட்சி இயக்கத்தை கவனிக்க உள்ளார், இந்த படத்திற்கு மதன் கார்க்கி வசனம் எழுதுகிறார்.

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தமது டிவிட்டர் பக்கத்தில் தனுஷின் சமீபத்திய புகைப்படத்தை பகிர்ந்து, கேப்டன் மில்லர் லுக்கில் உள்ள எங்கள் ஹீரோவின் சாதாரண அதிகாரப்பூர்வமற்ற புகைப்படம் கூட இணையத்தை அதிர வைக்கும்" என தலைப்பிட்டு புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். இந்த புகைப்படம் விமான நிலையத்தின் பின்னணியில் அமைந்துள்ளது போல தெரிகிறது. தனுஷ் முக கவசம் அணிந்து, புகைப்படத்தில் இடம் பெற்றுள்ளார்.

Also Read | நயன் & VJS-ன் 'நானும் ரவுடி தான்'.. VJS ROLE-ல் நடிச்சிருக்க வேண்டிய சிவா.. நடிக்காதது ஏன்?..

தொடர்புடைய இணைப்புகள்

Captain Miller Dhanush Look Photo went Viral from Airport

People looking for online information on Captain Miller, Captain Miller Dhanush New Look Photo, Dhanush will find this news story useful.