இது லிஸ்ட்லயே இல்லயே!.. நம்ம லிஜெண்ட் சரவணன் படத்துக்கு ‘பாடியிருக்கும்’ செம TRENDING பாடகர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்துள்ளவர் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்.

Advertising
>
Advertising

இவருடைய பெரும்பாலான படங்களில் இவரது இசை அனைத்துமே ஆல்பம் ஹிட் என்று ரசிகர்களால் புகழப்படும். கிட்டாரும் புல்லாங்குழலும் கீ போர்டும் வயலினும் சில வேளைகளில் சாக்ஸாஃபோனும் இவரது இசையில் பிரதான கருவிகளாக அனைவரையும் வருடுபவை.

இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், லிஜெண்ட் சரவணன் நடிக்கும் LEGEND படத்துக்கு இசையமைத்து வருகிறார். இதில் அறிமுக நடிகராக களமிறங்குகிறார் லிஜெண்ட் சரவணன் அருள். இவருடன் இந்த பிரம்மாண்ட படத்தில், நாயகியாக பிரபல பாலிவுட் நடிகையான Urvashi Rautela (ஊர்வசி ராவ்டேலா) இணைந்துள்ளார்.

மேலும் பிரபு, விவேக், விஜயகுமார், நாசர், தம்பி ராமையா, மயில்சாமி, லதா, கோவை சரளா, தேவி மகேஷ், ரோபோ ஷங்கர் மற்றும் பலர் நடிப்பதாக ஏற்கனவே கூறப்பட்டிருந்தது. இந்த படத்துக்கு ஆர்.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். ரூபன் எடிட்டிங் பணியையும் வைரமுத்து, பா.விஜய், சிநேகன் ஆகியோர் பாடல் பணிகளையும் மேற்கொள்கிறார்கள்.

முன்னதாக இந்த திரைப்படத்தின் ஆக்‌ஷன் படப்பிடிப்பு காட்சிகள் மற்றும் நாயகி ஊர்வசி ராவ்டேலாவுடன் லிஜெண்ட் சரவணனின் ரொமாண்டிக் பாடல் படப்பிடிப்பு காட்சிகள் உள்ளிட்டவை எடுக்கப்படும்போது எடுத்த புகைப்படங்கள் வைரலாகின.

இந்நிலையில் இந்த படத்துக்காக,  பிரபல பாடகர் Armaan malik ஒரு பாடலை பாடியிருப்பதாக நம்பத் தகுந்த தகவல்கள் கிடைத்துள்ளன. பாடகர் அர்மான் மாலிக் புட்டபொம்மா உள்ளிட்ட பல ஹிட் பாடல்களை இந்தியா முழுவதும் உள்ள மொழிகளில் பாடியுள்ளவர்.

இவர் லிஜெண்ட் சரவணன் அருள் நடிக்கும் முதல் படத்தில் பாடியுள்ளது தொடர்பான தகவல்கள் விரைவில் படத்தின் இசைவிழாவை ஒட்டி அதிகாரப்பூர்வமாக தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய இணைப்புகள்

ButtaBomma Armaan Malik Sings Harris Legend Saravanan film

People looking for online information on Ala Vaikunthapurramuloo, Armaan Malik, Butta Bomma, Harris Jayaraj, Legend, Saravanan Arul will find this news story useful.