பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி. தமிழிலும் ரோமியோ உள்ளிட்ட சில படங்களில் நடித்த ஷில்பா ஷெட்டி தமிழ் ரசிகர்களுக்கும் பரிச்சயமானவர் தான்.
இவருடைய கணவரும், திரைப்பட தொழிலதிபருமான ராஜ் குந்த்ரா மும்பை போலீசாரால் தற்போது கைது செய்யப்பட்டு இருக்கிறார்.
ராஜ்குந்த்ரா எடுத்த சில ஆபாச படங்கள் தான் இதற்கு காரணம். இதனால் ராஜ் குந்த்ரா மீது தகவல் தொழில்நுட்ப சட்டம் ஐபிசி 420, 292, 293 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பெண்களை தவறாக சித்தரித்து படம் எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.
சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. ராஜ் குந்த்ரா, ஆபாச திரைப்படங்களை இயக்கியதுதான் இதற்கு காரணம் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதனிடையே இயக்குனர் ராஜ் குந்த்ரா ஆபாச திரைப்படங்களை எடுத்து சம்பாதித்து வந்ததாக மும்பை போலீசார் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த சுமார் 1,400 பக்க குற்றப்பத்திரிகை பெருமளவில் அதிர வைத்திருக்கிறது.
இந்த நிலையில் இந்த குற்றப்பத்திரிகையில் தற்போது ராஜ் குந்த்ராவின் மனைவியும் பிரபல நடிகையுமான ஷில்பா ஷெட்டியின் வாக்குமூலத்தையும் போலீசார் பதிவு செய்திருக்கின்றனர். அந்த வாக்குமூலம் தற்போது பரபரப்பாகி வருகிறது. அதன்படி நடிகை ஷில்பா ஷெட்டி தன்னுடைய கணவர் ஆபாச படம் எடுத்து வந்தது குறித்து தனக்கு தெரியாது என்பதற்கு விளக்கம் அளித்திருக்கிறார்.
இது தொடர்பாக நடிகை ஷில்பா ஷெட்டி அளித்துள்ள விளக்கத்தில் ராஜ் குந்த்ராவின் ஹாட் ஷார்ட்ஸ் மற்றும் பாலிவுட் பேம் உள்ளிட்ட செயலிகள் குறித்து தனக்கு தெரியாது என்று குறிப்பிட்டதுடன், தன்னுடைய வேலையில், தான் மிகவும் பிஸியாக இருந்ததால் தனது கணவர் ஆபாச படம் எடுத்து வந்ததே தனக்கு தெரியாது என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். நடிகை ஷில்பா ஷெட்டி தான் பிஸியாக இருந்ததால் தன்னுடைய கணவர் ராஜ் குந்த்ரா ஆபாச படம் எடுத்து வந்தது தனக்கு தெரியாது என்று அளித்துள்ள இந்த வாக்குமூலம் தற்போது மிகப்பெரிய அளவில் சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது.
முன்னதாக ராஜ் குந்த்ரா, வெப்சீரிஸ் என்கிற போர்வையில் பெண்களை ஏமாற்றி ஆபாச படம் எடுத்ததாகவும், இந்த படங்களுக்கென்றே தனியாக செல்போன் செயலிகளை தயாரித்து, அவற்றில் இந்த ஆபாசப் படங்களை பதிவேற்றியதாகவும் புகார் எழுந்து இருந்தது. இந்த புகாரின் அடிப்படையில்தான், மும்பை போலீசார் ராஜ் குந்த்ராவை கைது செய்தனர். இந்த வழக்கில் மேலும் பலர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டும் வருகின்றனர்.
பெண்களை வைத்து ஆபாச படம் எடுத்த ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவின் மீது கடந்த ஜூலை மாதம் 19-ஆம் தேதி, போலீசார் குற்றம்சாட்டி கைது செய்தனர். அத்துடன் ராஜ் குந்த்ராவின் ஐடி பிரிவு தலைவர் ரியான் தோர்பேயும் கைதானார். மும்பை மெட்ரோபாலிட்டன் கோர்ட்டில் நடந்து வந்த இந்த விசாரணையில், இது தொடர்பாக 1,467 பக்க குற்றப்பத்திரிகையை மும்பை போலீசார் ராஜ்குந்த்ராவுக்கு எதிராக தாக்கல் செய்து இருக்கின்றனர்.
இவை தவிர, இந்த வழக்கில் தேடப்பட்டு வரும் யாஷ் தாக்குர் என்கிற அரவிந்த் ஸ்ரீவட்சவா, ராஜ் குந்த்ராவின் மைத்துனர் பிரதீப் பாக்சி ஆகியோருக்கு எதிரான சாட்சியங்களும் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் பதிவாகியுள்ளதாக தெரிகிறது. இவர்களுள் யாஷ் தாக்குர் சிங்கப்பூரிலும், பிரதீப் பாக்சி லண்டனிலும் இருப்பதாக தெரிகிறது. இதனிடையே ஷில்பா ஷெட்டி உள்ளிட்ட முக்கிய சாட்சிகள் அளித்த வாக்குமூலங்களும் இந்த குற்றப்பத்திரிக்கையில் இடம் பெற்றிருக்கின்றன. அந்த வகையில்தான் ஷில்பா ஷெட்டி இது பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்றும், தான் பிஸியாக இருந்ததே அதற்கு காரணம் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
இதேபோல் நடிகை ஷெர்லின் சோப்ரா போலீசாரிடம் முன்னதாக அளித்த வாக்குமூலமும் பதிவாகியிருக்கிறது. அந்த வாக்குமூலத்தில், “எந்த தயக்கமும் இல்லாமல் ராஜ்குந்த்ரா, என்னிடம் ஹாட் ஷார்ட்ஸ் செயலியில் வேலை செய்யுமாறு கேட்டுக் கொண்டார். ஆனால் இந்த செயலியில் அதிகமான ஆபாசமான மற்றும் கிளர்ச்சியூட்டக் கூடிய வீடியோக்களில் நடிக்கவேண்டும் என்று தெரிவித்த போது நான் அதை மறுத்தேன்.
‘தி ஷெர்லின் சோப்ரா ஆப்’ என்கிற மொபைல் செயலியை உருவாக்கவும் ஆர்ம்ஸ் ப்ரைம் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்தேன். இந்த நிறுவனத்தின் இயக்குநர்களாக சவுரப் குஷ்வானா மற்றும் ராஜ் குந்த்ரா ஆகியோர் இருந்தனர். இந்த உடன்படிக்கைப்படி 50% வருவாயை எனக்கு தரவேண்டும். ஆனால் எனக்கான பங்கு கிடைக்கவில்லை” என்று குறிப்பிட்டிருந்தார். இதேபோல் இந்த விவகாரத்தில் தொடர்புடைய மற்றொரு சாட்சியான சேசாஜ் ஷா போலீசாரிடத்தில் வாக்குமூலம் அளித்திருக்கிறார்.
இந்த வாக்குமூலத்தின் படி, 2020-ஆம் ஆண்டு ஊரடங்கு காலத்தில் மட்டும் ஹாட் ஷார்ட்ஸ் பயன்பாட்டுக்காக 3 திரைப்படங்கள் எடுக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். அத்துடன் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட யாஷ் தாக்கூர் ஒரு ரீமேக் படத்தில் தன்னை நடிக்க வைத்ததாகவும், அதிக ஆபாச மற்றும் குறைவான ஆடை காட்சிகள் இந்த படத்தில் பயன்படுத்தப்பட்டதாகவும், இந்த படம் இந்தியாவில் திரையிடப்படாது என்று தனக்கு உறுதி அளிக்கப்பட்ட போதும், இந்தப் படம் இந்தியாவில் திரையிட பட்டதாகவும் தெரிவித்திருக்கிறார். மேலும் படத்தில் இருக்கும் இந்த மோசமான காட்சிகளை நீக்குவதற்கு வலியுறுத்தியபோது, யாஷ் தாக்கூர் மறுத்து விட்டதாகவும், ஷெர்லின் சோப்ரா குற்றம் சாட்டி இருக்கிறார்.
இந்த நிலையில் ராஜ்குந்த்ரா தொடர்பான இந்த வழக்குகளில் ஷில்பா ஷெட்டியின் வாக்குமூலம் முக்கியமான சாட்சியாக எதிர்பார்க்கப்பட்ட வந்த சூழலில், தான் நடிப்பில் பிஸியாக இருந்ததால் தனக்கு இது பற்றி எதுவும் தெரிந்திருக்கவில்லை என்று ஷில்பா ஷெட்டி கூறிய வாக்கு மூலம், இந்த குற்றப்பத்திரிகையில் பதிவாகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read: அடக்கடவுளே!! சூரி விவகாரம் போலவே.. திருமணத்துக்கு சென்ற விமலுக்கு நடந்த பரபரப்பு சம்பவம்!