ரொமான்ஸ் ததும்பும் ‘ஹே சினாமிகா’.. பிரபுதேவா, லாரன்ஸ் வரிசையில் இயக்குநரான பிரபல நடன மாஸ்டர்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை, 16, பிப்ரவரி 2022: ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் குளோபல் ஒன் ஸ்டுடியோஸ் தயாரித்து வழங்கும் பிருந்தா மாஸ்டர் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஹே சினாமிகா’ மார்ச் 3, 2022 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Advertising
>
Advertising

இயக்குநர் ஆன நடன மாஸ்டர் 

ஏற்கனவே பிரபுதேவா, லாரன்ஸ் ஆகியோர் நடன இயகுநர்களாக இருந்து பின் நடிகர்களாகவும் இயக்குநர்களாகவும் அவதாரம் எடுத்தனர். அந்த வகையில்  ‘ஹே சினாமிகா’ திரைப்படத்தை இயக்கியதன் மூலம் பிரபல நடன மாஸ்டர் இயக்குநர் ஆகியுள்ளார்.

ஹே சினாமிகா

காதல், நகைச்சுவை, உணர்வுகள் மற்றும் இசையின் கலலையாக உருவாகியுள்ள ஹே சினாமிகா திரைப்படம், காதல் மற்றும் நட்பைக் கொண்டாடும் இளைமை ததும்பும் படமாக இருக்கும் என்பதை டிரைலர் வெளிப்படுத்துவோடு படம் மீதான ஆர்வத்தை அதிகரிக்கிறது.

இந்நிலையில் தான் இந்த திரைப்படத்தை பிரபல நடன மாஸ்டர் பிருந்தா இயக்கியுள்ளார் என்கிற தகவலை கேட்டு ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.

நடன இயக்குநர் பிருந்தா

ஆம், அனைத்து தென்னிந்திய மொழிகள், இந்தி மற்றும் ஆங்கிலத்தில் பல்லாயிரக்கணக்கான திரைப்பாடல்களுக்கு நடனம் அமைத்து நாடு முழுவதும் இருக்கும் பிரபல கலைஞர்கள் மாஸ்டர் என்று பாசம் கலந்த மரியாதையுடன் அழைக்கும் நடன இயக்குநர் பிருந்தா தான், ‘ஹே சினாமிகா’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராகியுள்ளார்.

இப்படம் குறித்து பேசிய பிருந்தா மாஸ்டர், "இது ஒரு ஃபீல் குட் திரைப்படம். இளைஞர்கள் மிகவும் ரசிப்பார்கள். அதே சமயம், அனைத்து வயதினரும் இப்படத்தைப் பார்த்து மகிழலாம். கொண்டாட்டம், குதூகலம் என உணர்ச்சிகளின் உற்சாகக் குவியலாக ‘ஹே சினாமிகா’ இருக்கும்," என்று கூறியுள்ளார்.

Also Read: இளையராஜா-லாம் இந்த படத்துக்கு HELP பண்ண முடியாது! - கடைசி விவசாயி படம் குறித்து மிஷ்கின் உருக்கம்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Brindha master directed Dulquer Salman Hey Sinamika trailer

People looking for online information on Adithi Rao, Brindha, Dulquer salmaan, Dulquer Salman, Hey Sinamika, Kajal Aggarwal will find this news story useful.