இயக்குநர் வெற்றிமாறனிடம் ‘விசாரணை’, ‘வடசென்னை’, ‘அசுரன்’, ‘விடுதலை’ ஆகிய படங்களில் இணை இயக்குனராக பணியாற்றியவர் இயக்குநர் தமிழ்.

அசுரன்' படத்தின் இடைவேளை காட்சியில் தனுசின் மகனை பிடிக்க வரும் கூட்டத்தின் தலைவனாக தமிழ் நடித்து இருப்பார். தற்போது இவர் விக்ரம் பிரபு, அஞ்சலி நாயர் நடிப்பில் டாணாக்காரன் படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் லால், எம்.எஸ். பாஸ்கர், போஸ் வெங்கட் ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். மகேஷ்மாணிக்கம் ஒளிப்பதிவு செய்ய, ஜிப்ரான் இசையமைக்கிறார்.
சமீபத்தில் இந்தப் படத்தின் டீசர் வெளியிடப்பட்டு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அனைத்துப் பணிகளும் முடிவடைந்து வெளியீட்டுக்குத் தயாராகியுள்ள 'டாணாக்காரன்' படம் சென்சாரில் U/A சான்றிதழ் பெற்றுள்ளது. மேலும் இந்த படம் 2 மணி நேரம் 23 நிமிடங்கள் ஓடக்கூடியதாக உள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தை பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
மேலும் இந்த படம் திரையரங்கில் வெளியாகாமல் நேரடியாக டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது. விரைவில் இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. விக்ரம் பிரபு தற்போது மணிரத்னம் இயக்கத்தில் 'பொன்னியின் செல்வன்' படத்தில் நடித்து வருகிறார்.