அட்ரா சக்க! இந்த நம்ப முடியாத சாதனையை செய்து கோலிவுட்டின் முதல் நடிகரானார் சிம்பு! வேற லெவல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சிம்பு நடிப்பில் Time Loop பாணியில் அமைந்துள்ள மாநாடு படம் வியாழன் அன்று (25.11.2021) உலகம் முழுவதும் திரையரங்கில் வெளியானது.

Breaking: STR becomes No.1 actor in Instagram followers
Advertising
>
Advertising

மாநாடு படத்தை தொடர்ந்து சிம்பு, கௌதம் மேனன் உடன்  இணையும் படத்திற்கு ‘வெந்து தணிந்தது காடு’ என பெயரிடப்பட்டது. சமீபத்தில் இந்த படத்தின் Glimpse வீடியோ Journey of Muthu என்ற பெயரில் ரிலீசாகியுள்ளது. சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபல விமர்சகர்கள் படத்தை பார்த்துவிட்டு தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.  ரசிகர்க்ள் மத்தியிலும் மிகப்பெரிய வரவேற்பை இந்த படம் பெற்றுள்ளது. சமீபத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி, சிவகார்த்திகேயன், இயக்குனர் சங்கர் ஆகியோர் படத்தை பாராட்டியிருந்தனர். 25 நாட்களை கடந்து மாநாடு படம் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.

Breaking: STR becomes No.1 actor in Instagram followers

‘வெந்து தணிந்தது காடு’ படத்தை தொடர்ந்து சிம்பு, ஸ்டூடியோ கிரீன் K. E ஞானவேல் ராஜா தயாரிப்பில், சில்லுனு ஒரு காதல் இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் சிம்புவும், கௌதம் கார்த்திக்கும் இணைந்து நடிக்கும் 'பத்துதல' படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் ப்ரியா பவானி சங்கர், கலையரசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த இரண்டு படங்கள் தவிர்த்து ஐசரி கணேஷ் தயாரிப்பில் கோகுல் இயக்கத்தில் கொரோனா குமார் படத்திலும் நடிக்க உள்ளார். 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சிலம்பரசன் இன்ஸ்டாகிராமில் 54 லட்சம் பின் தொடர்பாளர்களை பெற்று தமிழ் சினிமாவில் அதிக பின் தொடர்பாளர்களை கொண்ட நடிகர் என்கிற சாதனையை படைத்துள்ளார். இதனை சிம்பு ரசிகர்களும் கொண்டாடி வருகிறார்கள். சிம்பு சமூக வலைதளங்களின் பக்கம் ஒரிரு ஆண்டுகளுக்கு முன்னரே மறுபிரவேசம் செய்தது குறிப்பிடத்தக்கது. மறுபிரவேசம் செய்த உடன் தமிழ் சினிமாவில் அதிக பின் தொடர்பாளர்களை பெற்று சாதனை படைத்தது மிகப்பெரிய விஷயம் என சிம்பு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். மேலும் சிம்புவுக்கு அடுத்து இன்ஸ்டாகிராமில் நடிகர் விஜய் சேதுபதி 4.5 மில்லியன் பின் தொடர்பாளர்களை கொண்டுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Breaking: STR becomes No.1 actor in Instagram followers

People looking for online information on இன்ஸ்டாகிராம், சிம்பு, சிம்பு சாதனை, Instagram Followers, Kollywood, Silambarasan TR, Simbhu, Str, Vijay Sethupathi will find this news story useful.