BREAKING: சிவகார்த்திகேயன் நடிக்கும் மாஸ் ஆன "டான்" படத்தின் ரிலீஸ் தேதி இதுவா? போடு வெடிய!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக டாக்டர் (Doctor) திரைப்படம் படம் கடந்த அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி தியேட்டரில் வெளியானது. விமர்சகர்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் பரவலாக நல்ல வரவேற்பை பெற்று 100 கோடி ரூபாய் வசூல் செய்தது. இந்த டாக்டர் திரைப்படம்.

Advertising
>
Advertising

'டாக்டர்' படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படம் 'டான்'. இந்தப் படத்தை லைகா நிறுவனத்துடன் இணைந்து சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் தயாரிக்கிறது. இப்படத்தை அட்லியிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த சிபி சக்ரவர்த்தி இயக்கியுள்ளார். இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார்.'இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி 11 ஆம் தேதி கோயம்புத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் பூஜையுடன் தொடங்கியது. பின்னர் முதற்கட்டப் படப்பிடிப்பு கொரோனா காரணமாக தடைபட்டது.

பின் சமீபத்தில் மீண்டும் பொள்ளாச்சி, ஆக்ரா, சென்னையில் படப்பிடிப்பு துவங்கி நடைப்பெற்றது.  இந்த படத்தின் சூரி, சிவகார்த்திகேயன், எஸ்.ஜே சூர்யா சம்பந்தப்பட்ட காட்சிகளின் டப்பிங் ஏற்கனவே முடிந்துள்ளது,  கடந்த (10.12.2021) அன்று இந்த படத்தின் அனைத்து படப்பிடிப்பும் முடிந்துவிட்டதாக படக்குழு டிவிட்டரில் அறிவித்தது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி வரவேற்பை பெற்றது. டியூனி ஜான் இந்த படத்தின் போஸ்டரை வடிவமைததார்.

இந்நிலையில் சிவகார்த்திகேயனின் டான் படம் வரும் 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 17 ஆம் தேதி சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகும் என நம்பந்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. டாக்டர்' படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ப்ரியங்கா அருள் மோகன் நடிக்கிறார். இந்த படத்தில் அங்கையற்கன்னி எனும் பெயரில் பிரியங்கா நடிக்கிறார். இவர்களுடன் S J சூர்யா, சிவாங்கி, ஆர்.ஜே.விஜய், முனிஷ்காந்த், பால சரவணன், காளி வெங்கட் ஆகியோரும் நடிக்கிறார்கள். இந்த படத்தில் கல்லூரி மாணவராக நடிக்க கனிசமாக தனது உடல் எடையைக் குறைத்துள்ளார் சிவகார்த்திகேயன்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Breaking: Sivakarthikeyan’s Don releasing on February 17th 2022

People looking for online information on சிவகார்த்திகேயன், டான், டான் ரிலிஸ், டான் ரிலீச், டான் ரிலீஸ், ரிலீஸ், Don, Don Release Date, Priyanka Mohan, Sivakarthikeyan, SK will find this news story useful.