BREAKING: புதிய தெலுங்கு படத்தில் தனுசுடன் ஜோடி சேரப்போகும் இளம் மலையாள நடிகை! இவங்க தான் போல!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் தனுஷ் தமிழ், இந்தியை தொடர்ந்து தெலுங்கில் நாகவம்சியின் சித்தாரா என்டர்டெயின்மென்ட்  நிறுவனத்தின் புதிய படத்தில் நடிக்க உள்ளார்.

Advertising
>
Advertising

பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கும் இந்த படம் தெலுங்கு மற்றும் தமிழில் உருவாக உள்ளது. இந்த படத்தின் டைட்டில் லுக் இன்று காலை 9:36 மணிக்கு வெளியாக உள்ளது. கல்வித்துறையை அடிப்படையாக கொண்டு இந்தப்படம் உருவாவதை போஸ்டர் மூலம் அவதானிக்க முடிகிறது. இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடிகை சம்யுக்தா மேனன் நடிப்பதாக நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. 

நடிகை சம்யுக்தா மேனன் இதே சித்தாரா என்டர்டெயின்மென்ட்  நிறுவனத்தின் பீம்லா நாயக் படத்தில் தற்போது நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. மலையாளத்தில் சச்சி இயக்கத்தில் பிரிதிவ் ராஜ், பிஜூ மேனன் நடிப்பில் வெளிவந்து பெரிய வெற்றிப்பெற்ற ஐயப்பனும் கோஷியும் படம் தற்போது தெலுங்கில் பீம்லா நாயக் என உருவாகி உள்ளது. பிஜூ மேனன் கதாபாத்திரத்தில் பவன் கல்யான் நடிக்கிறார், பிரிதிவ் ராஜ் கதாபாத்திரத்தில் ராணா டகுபட்டி நடிக்கிறார். 2022 பிப்ரவரி 25 ஆம் நாள் இந்த படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே வேளையில் தனுஷ் தனது 43 வது படமாக தற்போது "மாறன்" படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். இவர்களுடன் முக்கிய வேடத்தில் நடிகர் மகேந்திரன், அமீர் சுல்தான், சமுத்திரக்கனி, ஸ்முருதி வெங்கட் ஆகியோர் நடிக்கிறார்கள். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இந்த படத்தை மாபியா, துருவங்கள் 16 படங்களின் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்குகிறார். 

தனது 44 வது படமாக சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில், திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்திற்கான கதை, திரைக்கதை மற்றும் வசனங்களை தனுஷே எழுதியுள்ளார். இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். ஆரம்பம், அனேகன், வாகை சூடவா பட ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தில் இயக்குனர் இமயம் பாரதிராஜாவும், நடிகர் பிரகாஷ் ராஜூம் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். மேலும் தனுசுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர், நித்யா மேனன், ராக்ஷி கண்ணா ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் செல்வராகவன் இயக்கத்தில் தானு தயாரிப்பில் நானே வருவேன் என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளது.

 

 

தொடர்புடைய இணைப்புகள்

Breaking: Samyuktha Menon is pairing with Dhanush

People looking for online information on Dhanush, Dhanush Telugu Movie, Maaran, Samyuktha Menon, Telugu Movie, Venkat Atluri will find this news story useful.