BREAKING: BIGG BOSS முகேன் ராவ் நடிக்கும் புதிய படம்! OTT & TV உரிமையை கைப்பற்றிய பிரபல சேனல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

BIGG BOSS முகேன் ராவ் நடிக்கும் புதிய படத்தின் OTT & TV உரிமையை பிரபல சேனல் கைப்பற்றியுள்ளது. 

Breaking : Mugen Rao Velan satellite & Digital rights
Advertising
>
Advertising

வேலன் படக்குழு

Skyman Films International சார்பில் தயாரிப்பாளர் கலைமகன் முபாரக், தயாரிப்பில், பிக்பாஸ் புகழ் முகேன் ராவ் நாயகனாக நடிக்கும் “வேலன்” திரைப்படம். அழகான குடும்ப திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தை இயக்குனர் சிறுத்தை சிவாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய இயக்குநர் கவின் எழுதி, இயக்கியுள்ளார்.  இப்படத்தில் மீனாக்‌ஷி கோவிந்தன் நாயகியாகவும் சூரி முக்கிய பாத்திரத்திலும் படம் முழுவதும் வரும் பாத்திரங்களாக நடிக்கிறார்கள். இவர்களுடன் பிரபு, மரியா வின்செண்ட், தம்பி ராமையா, ஹரீஷ் பேரடி, பிரிஜிடா  ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர். பிரபல மலையாள  மொழி இசையமைப்பாளர் கோபி சுந்தர் இப்படத்திற்கு  இசையமைக்கிறார்.

Breaking : Mugen Rao Velan satellite & Digital rights

வேலன் ரிலீஸ்

கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்ய, பாலாசுப்பிரமணியன் கலை இயக்கம் செய்கிறார். K.சரத்குமார் படத்தொகுப்பு செய்துள்ளார். மேலும் தொழில்நுட்பக் குழுவில் மகேஷ் மேத்யூ (ஸ்டண்ட்), தினேஷ்-விஜி சதீஷ்-ராதிகா (நடனம்), உமாதேவி-வேல்முருகன்-கலைமகன் முபாரக் (பாடல்கள்), தொழில்நுட்ப குழுவில்  பணியாற்றியுள்ளனர். Skyman Films International சார்பில் தயாரிப்பாளர் கலைமகன் முபாரக், தயாரிப்பில், இயக்குநர் கவின் எழுதி, இயக்கியுள்ள “வேலன்” படம் டிசம்பர் 31  உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. கலை மகன் முபாரக் வலிமை படத்தின் செங்கல்பட்டு திரையரங்க உரிமையை கைப்பற்றியவர் ஆவார். 

இந்த படத்தின் ஓடிடி, டிவி ஒளிபரப்பு உரிமையை ஜி தமிழ் தொலைக்காட்சியும், ஜி5 ஒடிடியும் கைப்பற்றியுள்ளன என நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய இணைப்புகள்

Breaking : Mugen Rao Velan satellite & Digital rights

People looking for online information on Bigg boss, BIGGBOSS. Mugen Rao, Velan, Zee Tamil will find this news story useful.