'விக்ரம்' படத்தை தொடர்ந்து 'DON' படத்தின் கேரள உரிமை.. சாதனை விலைக்கு வாங்கிய பிரபல தயாரிப்பாளர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சிவகார்த்திகேயன் நடிக்கும் டான் படத்தின் கேரள உரிமம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | விஜய் தேவரகொண்டா பிறந்தநாள் பார்ட்டியில் சமந்தா.. VJD-க்கு கொடுத்த செம்ம சர்ப்ரைஸ்!

சிவகார்த்திகேயன் நடிப்பில் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரித்துள்ள டான் திரைப்படம் மே 13 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. சிவகார்த்திகேயன், எஸ் ஜே சூர்யா, சூரி, பிரியங்கா அருள் மோகன், ஷிவாங்கி மற்றும் பால சரவணன், பிக்பாஸ் ராஜூ உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் டான். இந்த படத்தை அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி  இயக்கியுள்ளார்.

அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தை சிவகார்த்திகேயனின் எஸ் கே புரொடக்ஷன்ஸ் நிறுவனமும், லைகா புரொடக்ஷன்ஸும் இணைந்து தயாரித்துள்ளன.  சிவகார்த்திகேயன் இந்த படத்தில் கல்லூரி மாணவனாகவும் எஸ் ஜே சூர்யா கல்லூரி முதல்வராகவும் நடித்துள்ளனர். நகைச்சுவை மற்றும் காதலுக்கு முக்கியத்துவம் உள்ள படமாக டான் உருவாகியுள்ளது.

சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இந்த படத்தின் விளம்பரத்துக்காக பிரம்மாண்டமான பேனர்கள் வைக்கப்பட்டு விளம்பரப்படுத்தப் பட்டு வருகின்றன. இந்த படத்துக்கு இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு உள்ளது. அனிருத் இசையில் ஏற்கனவே வெளியாகியுள்ள ஜலபுல ஜங்கு மற்றும் பே (bae), Private Party ஆகிய பாடல்கள் சமூகவலைதளங்களில் ஹிட்டடித்துள்ளன.

ரிலீசுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் படத்தின் கேரள உரிமத்தை மிகப் பெரிய சாதனை விலைக்கு பிரபல தயாரிப்பாளர் சிபு தமின்ஸ் கைப்பற்றி உள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர் விஜய் நடித்த புலி படத்தினை தயாரித்தவர். கமல்ஹாசன் நடித்து ரிலீசுக்கு தயாராகி வரும் விக்ரம் படத்தின் கேரள உரிமத்தை வாங்கியவர்.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

'விக்ரம்' படத்தை தொடர்ந்து 'DON' படத்தின் கேரள உரிமை.. சாதனை விலைக்கு வாங்கிய பிரபல தயாரிப்பாளர்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Breaking: DON Kerala Theaterical rights acquired by Shibu Thameens for a record price

People looking for online information on DON Kerala Theaterical rights, Don Movie, Don Movie Updates, Priyanka Mohan, Shibu Thameens, Sivakarthikeyan will find this news story useful.