BREAKING: தமிழ் பிக்பாஸ் சீசன் 4-ன் அட்டகாசமான புரோமோ ரெடி - எப்போ வருது தெரியுமா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சி மூன்று சீசன்களாக ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த வருடம் நிகழ்ச்சி சற்று தாமதமாக துவங்குவதாக கூறப்படுகிறது.

ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் பிக்பாஸ் அடுத்த சீசன் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு புரோமோக்களும் வெளியாகியது. இதனையடுத்து தமிழ் பிக்பாஸ் குறித்து ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்பவர்கள் குறித்த தகவல்கள் பரவியது. ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் புரோமோ குறித்த தகவல்கள் கிடைத்துள்ளது. கமல்ஹாசன் பங்குபெற்ற இந்த நிகழ்ச்சியின் புரோமோ கடந்த 2 நாட்களுக்கு முன் படமாக்கப்பட்டுள்ளது. மேலும் இன்னும் 2 நாட்களில் இந்த நிகழ்ச்சியின் புரோமோ விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

தொடர்புடைய இணைப்புகள்

Breaking details about Kamal Haasan and Vijay TV's Bigg Boss season 4 | கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 4 நிகழ்ச்சி குறித்த பிரேக்கிங�

People looking for online information on Bigg Boss 4, Kamal Haasan, Vijay tv will find this news story useful.