BREAKING: நாளை வெளியாகும் 'வலிமை' படத்தின் டிரெய்லர் குறித்து வெளியான செம மாஸ் தகவல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'வலிமை' படம் 2022 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வருவதாக படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

Advertising
>
Advertising

வலிமை படத்திற்காக திரையரங்குகளை எடுக்கும் பணிகள் படக்குழு மூலம் முழுவீச்சில் துவங்கியுள்ளன. இதுவரை வெளியீட்டு தேதி அறிவிக்கபடாத நிலையிலேயே 'வலிமை' படத்தை திரையிட தியேட்டர் உரிமையாளர்கள் மத்தியில் பலத்த போட்டி நிலவுகிறது. குறிப்பாக தென் மாவ்ட்ட பகுதிகளில் உள்ள தியேட்டர்கள் தற்போதே வலிமை படத்தை திரையிடும் அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன.

இயக்குனர் H. வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை மிகப்பெரிய விலைக்கு மதுரை அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் கைப்பற்றியுள்ளது. வட, தென் ஆற்காடு ஏரியா உரிமையை ராக்போர்ட் எண்டெர்டெயிண்மெண்ட் நிறுவனத்தின் முருகானந்தம்  கைப்பற்றியுள்ளார். இந்நிலையில் வலிமை படத்தின் டிரெய்லர் நாளை வெளியாகும் என எதிர்பார்க்கலாம் என்று ராக்போர்ட் நிறுவனம் டிவிட்டரில் அறிவித்துள்ளது. இந்நிலையில் வலிமை படத்தின் டிரெய்லர் கால அளவு குறித்த தகவல் கிடைத்துள்ளது. வலிமை படத்தின் டிரெய்லர் 3 நிமிடங்கள் ஓடும் என்று நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த படத்தில் வில்லனாக கார்த்திகேயாவும், அஜித்திற்கு நண்பியாக ஹூமா குரேஷியும் நடிக்கின்றனர். ராஜ் ஐயப்பா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். கதிர் கலை இயக்குனராக பணியாற்றுகிறார். சண்டைக்காட்சி இயக்குனராக திலிப் சுப்பராயன் பணியாற்றுகிறார். நிரவ் ஷா ISC ஒளிப்பதிவு செய்ய, விஜய் வேலுக்குட்டி எடிட்டராக பணியாற்றுகிறார். இயக்குனர் எச். வினோத் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். போனி கபூருடன் இணைந்து ஜி ஸ்டூடியோஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Breaking Actor Ajith Kumar Valimai Movie Trailer Duration

People looking for online information on Ajith Kumar, அஜித், அஜித்குமார், திருவள்ளூர் போலிஸ், திலிப் சுப்பராயன், பைக், பைக் சண்டை, யுவன் சங்கர் ராஜா, வலிமை, வலிமை இண்டர்வெல், Bike Stunt, Boney kapoor, H Vinoth, Madurai, Madurai Police, Nirav shah, Valimai, Valimai trailer, Whistle Theme, Yuvan Shankar Raja will find this news story useful.